சட்டவிரோத நிதி சேகரிப்பு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவன் எனும் பேரின்பநாயகம் சிவபரனுக்கு எதிராக நோர்வே நீதிமன்றமொன்றில் நடைபெறும் விசாரணை குறித்து இலங்கை அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேலுப்பிள்ளை பிரபாரகன் 2 வருடங்களுக்கு இலங்கை அரசாங்கப் படைகளினால் கொல்லப்பட்டதையடுத்து எல்.ரி.ரி.ஈயின் தற்போதைய தலைவராக சிவபரன் விளங்குவதாக நம்பப்படுகிறது. பிரபாகரனுக்குப் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்ற குமரன் பத்மநாதன் பின்னர், இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். வெளிநாடுகளிலுள்ள தமிழர்களை அச்சுறுத்தி எல்.ரி.ரி.ஈ. நிதி திரட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்கும் நோர்வே நீதிமன்றமென்று கடந்த வாரம் சிவபரனை நீதிமன்றுக்கு அழைத்திருந்தது. (பி.ரி.ஐ.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக