ஒரே வீட்டில் ஒன்றாய் வசிக்கும் காதலர்கள்
மும்பை பத்திரிகைகளில் இப்போதைய பரபரப்பு செய்தி என்னவென்றால், கமல் மகள் ஸ்ருதியும் நடிகர் சித்தார்த்தும் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக வசிக்கிறார்கள் என்பது தான். கமல் மகள் ஸ்ருதியும் சித்தார்த்தும் அனக்னக ஓ தீருடு என்ற தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவருக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின.
சித்தார்த் ஏற்கெனவே மனைவியை விவாகரத்து செய்தவர் என்பதால் இந்த செய்திக்கு கூடுதல் கவன ஈர்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் மும்பை ஆங்கிலப் பத்திரிகை பரபரப்பாக ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் ஸ்ருதியும் சித்தார்த்தும் ஒரே வீட்டில் திருமணமாகாமல் கணவன் மனைவியாய் வசிப்பதாகவும், இது கமல்ஹாசனுக்குத் தெரியும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஸ்ருதியிடம் கேட்ட போது, எனது தனிப்பட்ட விடயங்களை மீடியாவில் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. அது மீடியாவுக்கு தேவையில்லாததும் கூட என்றாராம் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக