திங்கள், 30 மே, 2011

இலங்கையில் நானோ கார் விலை ரூ.9 1/4 லட்சம்


இலங்கையில் நானோ கார் விலை ரூ.9 1/4 லட்சம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான நானோ குட்டிக் கார், இலங்கையில் கால் பதித்தது.
நானோ காரின் அறிமுக விழா கொழும்பு நகரில் நடைபெற்றது. உலகிலேயே மிக மலிவான இந்தக் காரின் விலை, இலங்கை பணத்தில் ரூ.9 1/4 லட்சம் ஆகும். இந்தியாவில் இக்காரின் விலை சுமார் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மட்டுமே. அதை விட பல மடங்கு அதிக விலைக்கு இலங்கையில் விற்கப்படுகிறது.

இதற்கு இறக்குமதி வரியும், உள்ளூர் விற்பனை வரியும் இலங்கையில் அதிகமாக இருப்பதே காரணம்.இருப்பினும், இந்த காருக்கு இலங்கையில் அதிக கிராக்கி காணப்படுகிறது. ரூ.1 லட்சம் செலுத்தி, ஏராளமானோர் காருக்கு  ஆர்டர்' கொடுத்தனர். அவர்களுக்கு 2 வாரங்களில் கார் சப்ளை செய்யப்படும் என்று டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக