ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

Tata Nano நானோவுக்கு வெளிநாட்டில் தொழிற்சாலை அமைக்க டாடா தீவிரம்

டெல்லி: நானோ உற்பத்திக்காக வெளிநாட்டில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ள டாடா மோட்டார்ஸ், தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.


நானோவை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சிகளை டாடா தீவிரப்படுத்தியுள்ளது. பிக்செல் என்ற பெயரில் ஐரோப்பிய சந்தையில் வரவுள்ள நானோ பிக்செல், கடந்த மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏர்பேக்ஸ், சென்ட்ரல் லாக்கிங், யூரோ-4 மாசுக் கட்டுபாட்டு விதிகளின் தரத்துடன் வரவுள்ள நானோ பிக்செல், ரூ.3 லட்சம் விலையில் அங்கு அறிமுகப்படுத்தப்படலாம் என, பிரிட்டனை சேர்ந்த டிவி சேனல்கள் யூக செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், நானோ பிக்செல் உற்பத்திக்காக வெளிநாட்டில் தொழிற்சாலை அமைப்பதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஏதேனும் ஒரு நாட்டில் தொழிற்சாலை அமைப்பது குறித்து டாடா மோட்டார்ஸ் பரிசீலனை செய்து வருகிறது.

இதுகுறித்து டாடா குழுமத்தை சேர்ந்த மூத்த அதிகாரி கிஷோர் சவுகார் கூறியதாவது:

"நானோவுக்கு வெளிநாட்டில் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் முடிவு விரைவில் எடுக்கப்படும். தரமான உதிரிபாகங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், உதிரிபாக தொழிற்சாலைகள் நிறைந்த இடத்தில், நானோ தொழிற்சாலையை அமைக்க டாடா மோட்டார்ஸ் தி்ட்டமிட்டுள்ளது.

மேலும், டீலர்கள் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் நானோ அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த காராக இருக்கும். அதேவேளை, விலை குறைந்த கார் என்ற பெருமையையும் தக்கவைக்கும்," என்று கூறினார்.
English summary
Tata Motors finalising a production site for its Nano car at anoverseas location, which could be either in Latin America, South East Asia or Africa, a senior Tata group official said.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக