சனி, 23 ஏப்ரல், 2011

போனில் வளர்த்த காதல்..காதலி அழகாக இல்லை..வாலிபர் தற்கொலை

கோவை: ஒருவரை ஒருவர் பார்க்காமல் போன் மூலம் வளர்ந்த காதல், நேரில் கண்டதும் கசந்து போனது. காதலி அழகாக இல்லை என்பதால் காதலன் ரயில் முன் குத்து தற்கொலை செய்து கொண்டார்.


இந்த சம்பவம் கோவையில் நடந்தது.

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் உடல் துண்டுகளான நிலையில் கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் நடராஜன் (24), கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு நேதாஜி நகர் முதல் வீதியை சேர்ந்த சந்திரசேகரின் மகன் என்று தெரியவந்தது.

தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது கிடைத்த விவரம்:

பல் சிகிச்சைக்கான பரிசோதனை ஆய்வகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த நடராஜனுக்கு சில மாதங்களுக்கு முன் அவரது செல்போனில் ஒரு போன் வந்தது. எதிர்முனையில் பெண் பேசினார். அது ராங் கால் என்று தெரிந்து அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து பேசியுள்ளார் நடராஜன். இருவரும் தங்களது பேச்சை தொடர்ந்தனர்.

இவ்வாறு தொடங்கிய பேச்சு தினமும் தொடர ஆரம்பித்தது. தினமும் மணிக்கணக்கில் பேசி நேரில் பார்க்காமலேயே காதலை வளர்த்துள்ளனர்.

இந் நிலையில் சமீபத்தில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்து ஒரு இடத்தில் சந்தித்தனர். அப்போது நடராஜனை அந்தப் பெண்ணுக்குப் பிடித்துப் போக, அந்தப் பெண் அழகாக இல்லாததால் நடராஜனுக்கு பிடிக்கவில்லை.

இதையடுத்து அந்த பெண்ணிடம் பேசுவதை நடராஜன் தவிர்த்துள்ளார். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து பேச முயலவே இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சம்பவத்தன்று அவர் அலுவலகத்தில் நண்பர்களுடன் இரவு பத்தரை மணி வரை பேசிக் கொண்டு இருந்த நடராஜன் தனது வீட்டின் அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்துள்ளார். அந்த வழியே வந்த ரயில் ஏறி இறந்துள்ளார்.

நடராஜனின் நண்பர்கள் வட்டாரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. மேலும் நடராஜனின் டைரியை போலீசார் கைப்பற்றினர். அதில், `நான் காதல் விவகாரத்தில் இந்த முடிவை தேடிக்கொள்கிறேன். நான் இறந்ததை என்னை காதலித்த பெண்ணுக்கும் தெரிவிக்க வேண்டாம்' என்று கூறப்பட்டுள்ளது.
English summary
A 24 year old youth commits suicide in Coimbatore, after meeting his lover. The reason: She is not looking good.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக