சனி, 9 ஏப்ரல், 2011

ரிஸானாவை விடுவிக்குமாறு மீண்டும் கோரிக்கை


இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கை விடுதலை செய்யுமாறு ஹொங்கோங்கை தலைமையகமாகக் கொண்ட ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் கோரிக்கை விடுத்துள்ளது. சவுதிஅரேபிய மன்னரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு சவுதிஅரேபியாவில் பணிபுரிந்த வீட்டில் உள்ள குழந்தையை கொலை செய்ததாக ரிஸானா நபீக் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட பல தரப்பினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ரிஸானா நபீக்கின் மரண தண்டனையை தற்காலிகமாக ஒத்திவைக்க அவுதிஅரேபிய மன்னர் தீர்மானித்தார். இந்த நிலையில் பணிப்பெண்ணாக சென்றிருந்த ரிஸானா நபீக்கிற்கு விட்டுப் பணிப்பெண் தொழிலில் அனுபவம் இருந்திருக்கவில்லை எனவும் குழந்தையை கொலை செய்ய அவருக்கு எவ்வித அடிப்படை காரணங்களும் இல்லை எனவும் ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பசில் பெனாண்டோ அரேபிய செய்திச் சேவை ஒன்றிற்கு தொலைபேசி ஊடாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், ரிஸானா நபீக்குடன் உரையாடி பல மாதங்கள் கழிந்துள்ளதாகவும் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவருடைய பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாக பசில் பெனாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக