வியாழன், 7 ஏப்ரல், 2011

ஆயுதங்கள் வெடி பெருட்கள் மீட்பு!யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின்


யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் இடம் பெற்ற தேடுதல் நடவடிக்கையில் கையெறி குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கிளிநொச்சி புறநகர்ப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 3 கையெறி குண்டுகளும், இரண்டு மிதி வெடிகளும் மீட்கப்பட்டுள்ளன. அன்றைய தினம் உடையார் கட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 2 துப்பாக்கிகளும் அவற்றுக்குரிய ரவைகள் 11ம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் விடுதலைப் புலிகளால் முன்னர் பாவிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டது அல்லது விட்டுச் செல்லப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாமென்று படையினர் கூறுகின்றனர். இதேவேளை வவுனியாவில் இராணுவத்தினரும் கண்ணிவெடி அகற்றும் குழுவினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது 314 மிதிவெடிகளும் 81 மி.மீ. மோட்டார் குண்டுகள் இரண்டும், 60 மி.மீ.மோட்டார் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தலைமையாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக