ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

சத்ய சாய் பாபா மரணம்

புட்டபர்த்தி: உலகின் மிக அதிக மக்களால் குருவாக வழிபடப்பட்ட, ஆன்மீகத் தலைவர், சமூக சேவகர் புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா இன்று காலை 7.40 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 85.


கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு நோய்களாய் அவர் அவதிப்பட்டு வந்தார் பாபா. கடந்த மார்ச் 28-ம் தேதி அவர் புட்டபர்த்தியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். கடந்த வாரம் அவரது உடல் உறுப்புகள் முற்றாக செயலிழந்த நிலையில் புட்டபர்த்தி சத்யசாய் ட்ரஸ்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் மருத்துவர்களின் சிகிச்சைக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அவரது உறுப்புகள் எந்த மருந்தையும் ஏற்கவில்லை. எனவே அவரது உடல்நிலை மிக மோசமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் இன்று காலை அவரது சுவாச உறுப்புகள் செயலிழந்ததால், 7.40 மணிக்கு அவர் மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதற்கு முன்பாகவே ஆந்திரப் பிரதேச முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஏற்பாடு செய்த பிறகு, அவரது மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பாபாவின் மரணம் குறித்த செய்திகள் முன்கூட்டியே பரவ ஆரம்பித்ததால், புட்டபர்த்தி மற்றும் அனந்தபூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 6,000க்கும் அதிகமான போலீசார் புட்டபர்த்தியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் யாரும் சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் சாய்ட்ரஸ்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அருகே அனுமதிக்கப்படவில்லை. யாரும் மருத்துவமனை அருகில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரசாந்தி நிலையத்தில் மரியாதை செலுத்த...

'பாபாவின் உடலை விட்டு உயிர் பிரிந்துள்ளது. ஆனால் அவரது ஆன்மா இந்த மக்களிடையேதான் உள்ளது', பிரசாந்தி நிலையம் அறிவித்துள்ளது.

சாய்பாபாவின் உடல் இன்னும் சில மணி நேரங்களில் பிரசாந்தி நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 2 நாட்கள் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் வைக்கப்பட உள்ளது.

பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான விவிஐபிக்கள் புட்டபர்த்திக்கு வரவிருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நான்கு லட்சம் பக்தர்கள்
  Read:  In English 
உலகம் முழுவதிலுமிருந்து 4 லட்சம் பக்தர்கள் பாபாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

சாய் பாபாவின் மரணத்தையடுத்து ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.
English summary
Spiritual leader Sathya Sai Baba, who was hospitalized on March 28 following problems related to heart and respiration, passed away on Sunday morning. According to sources, Sai Baba breathed his last at 6.25am. Baba's body for darshan will be kept at Sai Kulwant Hall on Monday and Tuesday, Sathya Sai Central Trust announced officially. Preparations for last rites are under way. Four lakh devotees from India and abroad are expected to arrive.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக