வெள்ளி, 22 ஏப்ரல், 2011

இந்தியாவில் சந்தோஷம் கம்மி!: டென்மார்க் ரொம்ப மகிழ்ச்சி!!

மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டவர்கள் பட்டியலில் இந்தியா 71-வது இடத்தில் உள்ளது. 124 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில் டென்மார்க் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

124 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று கேட்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது. இதில் 17 சதவீத இந்தியர்கள் மட்டுமே தாங்கள் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

டென்மார்க் நாட்டவர்களில் 72 சதவீதத்தினர் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஸ்வீடன் மற்றும் கனடாவைச் சேர்ந்தவர்களில் 69 சதவீதத்தினர் இன்பமாக இருக்கின்றனர்.
59 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் குதூகலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

64 சதவீத இந்தியர்கள் போராடுவதாகவும், 19 சதவீதத்தினர் கஷ்டப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாகிஸ்தானியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. மகிழ்ச்சிப் பட்டியலில் 32 சதவீதத்துடன் பாகிஸ்தான் 40-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேஷ் (13%), சீனா(12%) 89 மற்றும் 92-வது இடங்களில் உள்ளன.
English summary
Pakistanis are found to be happier than Indians according to Global Wellbeing Survey. Only 17 percent Indians describe themselves as thriving whereas 32% Pakistanis consider themselves as thriving. Thus India and Pakistan ranked 71 and 40 in happiness. Denmark stands first in the list with 72% happy citizens

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக