ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

புனர்வாழ்வுபெற்ற முன்னாள் புலிகள் சிலர் மீண்டும் கைதாகியுள்ளனர்! - பிரதமர் அறிவிப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் மீண்டும் பயங்கரவாத செயற் பாடுகளில் சம்பந்தப்பட்டதாக கிடைத்த தகவல்களை யடுத்து அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள தாக பிரதமர் டி.எம்.ஜயரட்ண நேற்று நாடாளுமன்றத் தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை. நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட் டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரை யாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயிரம் விடு தலைப்புலி உறுப்பினர்கள் அவர்களின் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இத் திட்டம் இவ் வருடத்துக்குள் முடிப டையும் என பிரதமர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் புனர் வாழ்வு நிலையத்திலிந்து 313 விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் சமூகத்தில் முறையான வகையில் இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்து வதற்காக பாதுகாப்பு படையினர் அவர்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். 70 வீதமானோருக்கான புனர்வாழ்வு நட வடிக்கையை நாங்கள் பூர்த்தி செய்துள் ளோம். இவ் வருட இறுதிக்குள் ஏனையோருக்கான புனர்வாழ்வு நடவடிக்கை பூர்த்தியாகும் எனவும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக