வெள்ளி, 22 ஏப்ரல், 2011

வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த தமிழ் பொலிஸார்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மேலும் சில இளைஞர் யுவதிகளை இலங்கை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்ட நிலையில் இன்று அதற்கான நேர்முகப் பரீட்சைகள் வன்னியில் நடைபெற்றன. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த நேர்முகப் பரீட்சைககள் இடம்பெற்றாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர், யுவதிகளில் தகுதியுடையவர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். வடக்கு, கிழக்கு தமிழ் பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் சட்ட ஒழுங்குகளை பேணுவதற்காகவும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் விரைவில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக