சனி, 23 ஏப்ரல், 2011

இந்தியாவில் கடனட்டை மோசடி: இரு இலங்கைத் தமிழர் கைது

கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு நபரொருவரின் கடனட்டைத் தகவல்களை களவாடி குறித்த இரு இலங்கையர்களும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆந்திராவின் மங்களகிரி பிரதேசத்தில் வைத்தே கடனட்டை மோசடி சம்பவம் தொடர்பில் இலங்கையர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தமிழ்நாட்டின் வசித்து வருபவர்களாவர். ஹைதராபாத்தைச் சோ்ந்த நபரொருவரின் கடனட்டைத் தகவல்களை தொழில்நுட்பம் ஊடாக களவாடி அதனைக் கொண்டு அவரது வங்கிக் கணக்கிலிருந்து 160000 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர்களான அந்தோனிப்பிள்ளை நிமல்ராஜ், கனிட்சன் டினோ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மற்றையவர்களின் கடனட்டை தகவல்களைக் களவாடும் தொழிநுட்ப முறையை இவர்களுக்கு கற்பித்த மலேசிய தமிழர் ஒருவரை கைது செய்யவும் ஆந்திர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக