சனி, 2 ஏப்ரல், 2011

இலங்கைக்கு சர்வதேச கீர்த்தியைப் பெற்றுத் தந்த முரளிதரனை இன்று நாம் தேசிய வீரராக கெளரவிப்போம்.


- ஜனாதிபதி
உலக சாதனை படைத்து சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கீர்த்தியை பெற்றுக்கொடுத்த முத்தையா முரளிதரன் என்ற மாவீரனை இன்று இலங்கை மக்கள் அதி உன்னத நிலையில் வைத்து கெளரவிப்பார்கள். விளையாடும்போது ஏற்பட்ட சிறிய உபாதையையும் பொருட்படுத்தாமல் இந்த சாதனையாளர் முரளிதரன் தாய் நாட்டுக்காக இன்று களமிறங்குவார் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று நாடெங்கிலும் ஒரு கிரிக்கெட் விழாவைக் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. எமது வீரர்கள் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடெங்கிலும் வாண வேடிக்கைகளும் பட்டாசுகளும் கொளுத்தி மக்கள் ஆனந்தப் பூரிப்படைவார்கள். அது போன்றே எங்கள் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு பவுண்ரிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் வெடிகள் கொழுத்தப்படுமென்று நாட்டின் பல பகுதியில் ஒழுங்குகள் செய்யப் பட்டிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்தன. இன்றைய இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றாலும் அல்லது இரண்டாம் இடத்தைப் பெற்றாலும் தங்கு தடையின்றி வெற்றிவிழா இலங்கையில் பல நாட்களுக்கு நடைபெறுமென்றும் அறிவிக்கப்படுகிறது. நாளையதினம் ஞாயிற்றுக்கிழமை மக்கள் வெற்றிப்பூரிப்பில் வீதியிறங்கி இன் சுவைகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை அணியினது பதாதைகளும், முத்தையா முரளிதரனின் பதாதைகளும் நாட்டிலுள்ள பிரதான நகரங்களில் வைப்பதற்கான நடவடிக் கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக