புதன், 30 மார்ச், 2011

ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம்

ஆசியா பசிபிக் பிராந்திய நாடுகளில், ஊழல் மலிந்த 16 நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. `பெர்க்' என்ற வர்த்தக ஆலோசனை நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பில், மிக மோசமான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில், 10-க்கு 8.7 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த வரிசையில் கம்போடியா (9.27), இந்தோனேஷியா (9.25), பிலிப்பைன்ஸ் (8.9) ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஊழலற்ற நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம் (0.37) வகிக்கிறது. ஹாங்காங் (1.10), ஆஸ்திரேலியா (1.39), ஜப்பான் (1.90), அமெரிக்கா (2.39) ஆகிய நாடுகள் அதற்கு அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. இந்தியாவில் தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை விட பிராந்திய மற்றும் வட்டார தலைவர்கள் அதிக ஊழல்வாதிகளாகவும், அதேபோல், தேசிய அளவை விட நகரங்களில் உள்ள அதிகாரிகள் அதிக ஊழல் மலிந்தவர்களாக இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக