வெள்ளி, 3 டிசம்பர், 2010

தன் வாழ்க்கையை படமாக்கும் ஷகிலா!

Shakila தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாவாக எடுக்கிறார் கவர்ச்சி நடிகை ஷகிலா.

தமிழில் காமெடி நடிகையாக அறிமுகமாகி, பின்னர் மலையாளத்தில் கவர்ச்சி பாமாக மாறி கலக்கியவர் ஷகிலா.

பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவரது படங்கள் மோகன்லால், மம்முட்டி படங்களை விட அதிக நாட்கள் ஓடி பரபரப்பு ஏற்படுத்தின.

இவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். ஆனால் திருமணம் நடக்கவில்லை. மிகுந்த ஏமாற்றமடைந்தார்.

இந்த நிலையி ஷகிலா தனது வாழ்க்கையை படமாக்க முடிவு செய்துள்ளார். இதற்கான கதையை அவரே எழுதியுள்ளார். இப்படத்தை எஸ்.பி.ஆர். ராஜா என்பவர் இயக்குகிறார். இவர் பயணங்கள் தொடரும் என்ற படத்தை இயக்கியவர். தெலுங்கிலும் பல படங்கள் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றப் போகிறாராம் ஷகிலா.

இது பற்றி ஷகிலா கூறுகையில், "சினிமா இயக்குநராக வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. என் வாழ்வில் நடந்த கசப்பான மற்றும் சந்தோஷமான சம்பவங்களையே கதையாக உருவாக்கியுள்ளேன். அதைப் படமாக எடுக்க உள்ளேன். இந்த படத்தில் நானே கதாசிரியராக இருப்பது மகிழ்ச்சி. எஸ்.பி.ஆர். ராஜா இயக்குகிறார். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றுவேன்.

நடிகர், நடிகை தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் துவங்க திட்ட மிட்டுள்ளோம்.

இதற்கு அடுத்த படத்தை நானே இயக்கவும் முடிவு செய்துள்ளேன்..," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக