திங்கள், 6 டிசம்பர், 2010

மதிமுகவுக்கு கலைப்புலி தாணு முழுக்கு-வைகோவுக்கு நீண்ட கடிதம்

Kalaipuli Thanuசென்னை: மதிமுகவின் தலைமைக் கழக அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்குச் சொந்தக்காரரான பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மதிமுகவிலிருந்து விலகியுள்ளார். வைகோவின் போக்கை குற்றம் சாட்டி அவர் வைகோவுக்கு நீண்ட கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

எத்தனையோ பேர் மதிமுகவிலிருந்து விலகியுள்ளனர், மதிமுகவை கைவிட்டுள்ளனர். ஆனால் இப்போது மிக முக்கிய நபர் ஒருவர் மதிமுகவிலிருந்து விலகியுள்ளார். அவர் கலைப்புலி தாணு.

அரசியல் ரீதியாக முக்கியமில்லாதவராக இருந்தபோதிலும், மதிமுகவுக்கு மிக முக்கியமானவர் கலைப்புலி தாணு. இன்று மதிமுக தலைமைக் கழக அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்குச் சொந்தக்காரர் தாணுதான்.

மதிமுக தொடங்கியபோது அலுவலகம் அமைக்க இடம் இல்லாமல் வைகோ தவித்தபோது எழும்பூரில் உள்ள எனது இடத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தைரியமாக முன்வந்தவர் தாணு. அன்று முதல் இன்று வரை அவரது இடத்தில்தான் மதிமுக தலைமைக் கழகம் செயல்பட்டு வருகிறது.

மதிமுகவை விட்டபல முக்கியப் புள்ளிகள் விலகிச் சென்றபோதிலும் தாணு மட்டும் வைகோவுடனேயே இருந்து வந்தார். இந்த நிலையில் அவரது இளைய மகன் திருமண அழைப்பிதழை முதல்வர் கருணாநிதிக்கு கொடுத்தது தொடர்பாக அவருக்கும், வைகோவுக்கும் இடையே புகைச்சல் மூண்டுள்ளது. இதையடுத்து கட்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார் தாணு.

இதுகுறித்து அவர் வைகோவுக்கு எழுதியுள்ள மிக நீளமான கடிதத்தில், எனது இளைய மகன் திருமண அழைப்பிதழை முதல்வர் கருணாநிதிக்கு முதலில் கொடுத்தது தொடர்பாக எழுந்த குழப்பத்திற்கு விளக்கம் அளிக்கவே இக்கடிதம். நான் பொதுச் செயலாளரான உங்களை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதுதொடர்பாக உங்களுடன் பேச முயன்றும் அதை தாங்கள் தட்டிக் கழித்து விட்டீர்கள்.

1998ம் ஆண்டுஎனது மூத்த மகள் கல்யாணத்திற்கு கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தபோது அதை தாங்கள் எதிர்க்கவில்லை. அதேபோல 2002ம் ஆண்டு எனது மூத்த மகன் கல்யாண அழைப்பிதழை இவர்களுக்குத் தந்தபோதும் எதிர்க்கவில்லை.ஆனால் இப்போது இளைய மகன் கல்யாண அழைப்பிதழ் விவகாரத்தில் முதல்வருக்கு அழைப்பு விடுத்ததை தாங்கள் எதிர்ப்பது ஏன் என்று புரியவில்லை.

மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் அண்ணா சிலை திறக்கப்பட்டபோது அங்கு வைக்கப்பட்ட கல்வெட்டில் மதிமுக மூத்த தலைவர்கள் 8 பேருடைய பெயர்கள் உள்ளன. அதில் 6 பேர் தற்போது கட்சியில் இல்லை. நான் மட்டுமே நீடித்து வந்தேன்.

மதிமுக தொடங்கியது முதல் நான் கட்சியிந் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபட்டு வந்தேன். இப்போது திருமண அழைப்பிதழ் விவகாரத்தில் நான் விரட்டப்படுவது ஏன் என்று தெரியவில்லை என்று கூறி கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார் தாணு.

மதிமுக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும், கலைப் பிரிவு செயலாளராகவும் தாணு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்தவர்: கவுண்டமணி
பதிவு செய்தது: 06 Dec 2010 7:49 pm
என்னடா நாராயணா கட்சீல இருந்த ஒருத்தனும் போய்ட்டான்.என்ன பண்ணபோற சைகோ

பதிவு செய்தவர்: ரவுடி
பதிவு செய்தது: 06 Dec 2010 7:46 pm
இன்றைய தமிழ் திரை உலகம் ரவுடி களின் கட்டுப்பாட்டில் இர்ருகின்றது. உங்களக்கு இந்த முடிவுதான் நல்லலது. இல்லை எனில் தா கீ மாதரிதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக