வாகனங்களைத் தாக்கியதை அடுத்து இராணுவத்தினருக்கும் பொதுமகனுக்கும் இடையே
சாவகச்சேரி புத்தூர் சந்திக்கருகே இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மேற்படி நபர் குறிப்பிட்ட இடத்தில் காணப்பட்ட இருப்புக்கம்பியைக் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைத் தாக்கியதை அடுத்து இராணுவத்தினருக்கும் பொதுமகனுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் அப்பொதுமகன் பலியாகியுள்ளார். சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக