அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா இந்தியாவிற்க விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் அழைப்பினை ஏற்று அமைச்சர் தேவானந்தா இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக இந்திய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்புவதற்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஈ.பி.டி.பி கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது டெல்லிக்கு விஜயம் செய்யுமாறு வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா, டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் திகதி சென்னையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் தொடர்பில் அமைச்சர் தேவானந்தாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக