விடுதலைப் புலிகளின் கோட்டையாக இருந்த முல்லைத்தீவுக் காடுகளை வன விலங்குகளுக்கான சரணாலயமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. |
அடர்ந்த காடுகளும் இருண்ட வனப்பகுதியுமாக இருந்த முல்லைத்தீவு வனாந்திரமானது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம்களைக் கொண்ட கோட்டையாக விளங்கியிருந்தது. முல்லைத்தீவுக் காடுகளின் சதுர பரப்பளவு ஒரு இலட்சம் ஏக்கருக்கும் அதிகம் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனை வன விலங்குகள் சரணாலயமாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு மேலதிகமாக காட்டைச் சுற்றிலும் மின் கம்பி வேலி அமைத்து மனிதர்கள் அதற்குள் புகா வண்ணம் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அதன் பிரகாரம் தென்னிலங்கைக் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகள் மற்றும் சிறுத்தைகள் என்பன எதிர்வரும் காலங்களில் முல்லைத்தீவுக் காட்டில் கொண்டு போய் விடப்படவுள்ளன. கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவுக் காடுகளில் வாழ்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக