சனி, 4 டிசம்பர், 2010

சாகா' என்ற ஆவண திரைப்படம் திருவனந்தபுரம் அருகே மண்டபத்தில்

புலிகளின் புதிய மையம் கேரளா?
டெல்லி: கேரளாவில் வி்டுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணையும் சாத்தியக் கூறுகள் தெரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடபிலான ஆவணப்படம் ஒன்று, திருவனந்தபுரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக 'ஐ.பி.என் லைவ்' தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற தமிழின படுகொலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட 'முல்லைத்தீவு சாகா' என்ற ஆவண திரைப்படம் திருவனந்தபுரம் அருகே மண்டபத்தில் ஒளிபரப்பப்பட்டது. மிகவும் ரகசியமான முறையில் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தலைவர்களின் கூட்டம் குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் கேரள போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டது. ஆனால் இந்த கூட்டம் நடந்ததற்கான எந்த தடயங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் முல்லைத்தீவு சாகா திரைப்படம் காட்டப்பட்டது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. இனி இம்மாதிரி படங்களைத் திரையிடுவது நிறுத்தப்படுமா என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "இந்தத் திரைப்படத்தாலோ, அதைத் திரையிட்டதாலோ இந்திய இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. எனவே தடை ஏதுமில்லை" என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக