மணிப்பூர் மாநிலத்தில் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஐரோம் ஷர்மிளா என்ற பெண் கடந்த பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது 1972ம் ஆண்டு வரை யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூர், பின் தனிமாநிலமானது கடந்த பல ஆண்டுகளாக, சுயாட்சி உரிமை கோரி, நக்சலைட்டுகளும், பயங்கரவாதிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு கடந்த 1980 ஆம் ஆண்டு முதல், பயங்கரவாதிகளையும், நக்சலைட்டுகளையும் ஒடுக்குவதற்காக இராணுவத்திற்கு “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ வழங்கப்பட்டது.
இந்த சிறப்புச் சட்டத்தின்படி பொது இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே அது பயங்கரவாத நடவடிக்கையாகக் கருதப்படும். இராணுவம் மற்றும் துணை இராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கள் கூட தங்கள் மேதலதிகாரியின் அனுமதியின்றி யாரையும் சுட்டுக்கொல்ல முடியும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படாது. நீதிமன் றத்தின் அனுமதியின்றி எங்கு எப் போது வேண்டுமானாலும் சோதனை நடத்த முடியும். இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் வேண்டியதில்லை. இந்த சட்டம் அங்கு அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து அங்கு மினத உரிமை மீறல்கள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இராணுவத்தினரால் அப்பாவி பொது மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவது என மனித உரிமை மீறல்கள், அதிகரித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் அங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் இராணுவத்தினரின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். மணிப்பூர் தலைநகரம் இம்பாலுக்கு அருகே மாலோம் என்ற இடத்தில், கடந்த 2000ம் ஆண்டு, நவம்பர் 3ம் திகதி பஸ்சுக்காக, காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் 10 பேரை இராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் போராட்டம் தீவிரமடைந்தது.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சமூக ஆர்வலரான ஐரோம் ஷர்மிளா என்ற இளம்பெண், மணிப்பூர் மாநிலத்தில் அமுலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். ஆனால் அவரை பொலிஸார் தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைந்தனர். ஒரு ஆண்டிற்கும் மேலாக சிறையில் இருந்தபடியே ஷர்மிளா தனது உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்தார். ஆனால் அவருக்கு பொலிஸார் கட்டாயப்படுத்தி திரவ உணவுகளை செலுத்தினர். ஒரு ஆண்டிற்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார். இதனால் மறநாளே அவர் கைது செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக