சனி, 27 நவம்பர், 2010

Manipay கத்தி, வாள், கைத்துப்பாக்கி சகிதம் முகமூடி அணிந்து வந்த நபர்கள் வீடுகளில் கொள்ளை: மானிப்பாய், சுன்னாகம்

மழையைப் பயன்படுத்தி  இரவு நேரம் மூ ன்று வீடுகளுக்கு கத்தி, வாள், கைத்துப்பாக்கி சகிதம்  முகமூடி அணிந்துசென்ற கொள்ளைக்கோஷ்டியினர் கணவன்மார் முன்னிலையில் ஆயுதங்களைக் காட்டி பெண்களைப் பயறுத்தி அவர்கள் அணிந்திருந்த 40 பவுண் தங்கநகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இத் திகிலூட்டும் சம்பவம் புதன்கிழமை இரவு மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிவுகளிலுள்ள சங்குவேலி, மானிப்பாய், சுன்னாகம் ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளது.
இரு மணி நேரத்திற்குள் ஆயுத முனையில் திட்டம்போட்டு நடைபெற்ற இத்துணிகரக் கொள்ளைகள் பற்றி தெரியவருவதாவது: மானிப்பாய்  ஆனந்தன் வீதியில் தோட்டவெளியில் உள்ள சுகந்திரகுமார் என்பவரின் வீட்டிற்கு இரவு 8 மணிபோல் சமையலறைக் கதவைத் திறந்துகொண்டு முகமூடிகளுடன் கத்தி, வாள், கைத்துப்பாக்கியுடன் சென்ற நால்வர் கணவன் முன்னிலையில் மனைவியை ஆயுதங்களைக் காட்டிப் பயறுத்தி, அவர் அணிந்திருந்த 6 பவுண் எடையுள்ள சங்கிலி, காப்பு, தோடு ஆகியவற்றைப் பலாத்காரமாக அபகரித்துச் சென்றுள்ளார்கள்.
சங்குவேலியிலுள்ள ஆசிரியை   ஒருவரின் வீட்டிற்கு இரவு 8.30 மணிபோல் ஆயுதங்களுடன் சென்ற கொள்ளையர்,  கேற் பூட்டச்சென்ற கணவரை உள்ளே அழைத்துச் சென்று   மனைவியைப் பயறுத்தி    அவரும் தாயாரும்   அணிந்திருந்த 10 பவுண் எடையுள்ள   தங்க நகைகளை உருவிச்சென்றுள்ளார்கள்.
இதேவேளை, உடுவில் தெற்கில் வசிக்கும் மணியம் என்பவரின் வீட்டிற்கு இரவு 10.30 மணிபோல் கேற்றுக்கு மேலால்  ஏறி உள்ளே சென்ற இரு கொள்ளையர், கணினி பார்த்துக்கொண்டிருந்த இரு இளம் பெண்களையும் பயறுத்தி அவர்கள் அணிந்திருந்த அட்டியல், காப்பு, சங்கிலி தாய் அணிந்திருந்த  தாலிக்கொடி உட்பட சுமார் 25 பவுண் எடையுள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.
அட்டியல் அணிந்திருந்த ஒரு பெண்ணுக்கும், வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் ஒருவருக்கும் அன்று பகல் பதிவுத் திருமணம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக