யாழ். பிரபல தனியார் பாடசாலை மாணவி தவறான நடத்தை காரணமாக பாடசாலையை விட்டு இடைநிறுத்தம் யாழ் நகர்ப்பகுதியில் உள்ள பிரபல தனியார் பாடசாலை மாணவி பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளார்கர்ப் புறத்தைச் சேர்ந்த தனியார் பாடசாலை மாணவனை இவர் காதலித்து வந்ததாகவும் இந் நிலையில் இவர்கள் இருவரும் முத்தங்கள் பரிமாறி சேர்ந்திருக்கும் படங்கள் சில தவறான இணையத்தளங்களிலும் முகப் பக்கங்களிலும் வந்துள்ள நிலையில் இதனை அந்த பெண்கள் பாடசாலை அதிபர்களுக்கு சில நலன்விரும்பிகள் தெரிவித்தவுடன் விசாரனைகளை ஆரம்பித்த அதிபர் சம்பவம் உண்மை என்று அறிந்து அம் மாணவியை பாடசலையில் இருந்து இடைநிறுத்தியுள்ளார்.
இந்த செயலில் ஈடுபட்ட மாணவனது தனியார் பாடசாலைக்கு சிலர் தெரியப்படுத்தியும் அது தொடர்பாக அந்த ஆண்கள் பாடசாலை குறிப்பிட்ட மாணவனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவருகின்றது.
ஆண்கள் பாடசாலையை சேர்ந்த அம்மாணவன் பிரபல விளையாட்டு வீரர் என்ற காரணத்தால் இது பற்றி அந்த தனியார் பாடசாலை நிர்வாகம் மெளனமாக இருப்பதாக அறிய முடிகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக