வெள்ளி, 5 நவம்பர், 2010

Haiti ஒரு வாரத்திற்குள் அத்தீவைக் கடுமையான சூறாவளி தாக்கக் கூடும்

சோதனை மேல் சோதனை எதிர் நோக்கும் கெயிட்டி
இன்னும் ஒரு வாரத்துக்குள் சூறாவளி தாக்கும் அபாயம் - அமெரிக்கா எச்சரிக்கை
கொலரா நோயில் சிக்கிய ஹெயிட்டி தீவு அதில் இருந்து இன்னும் மீளாத நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் அத்தீவைக் கடுமையான சூறாவளி தாக்கக் கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தாண்டு ஆரம்பத்தில் கரீபியன் நாடான ஹெயிட்டி தீவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்றுவரை 13 இலட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அந்நாட்டை கொலரா நோய் கடுமையாகத் தாக்கியது. இதுவரை கொலரா நோய்க்கு 330 பேர் பலியாகியுள்ளனர். நோய்த் தடுப்பு நிவாரணத்தில் பல நாடுகளும் உதவி வருகின்றன.
எனினும் நோயின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இதற்கிடையில் இன்னும் ஒரு வாரத்தில்டொமஸ்என்ற சூறாவளி இத் தீவைத் தாக்கக் கூடும் என்று அமெரிக்க வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. கரீபியன் தீவுக் கூட்டங்களின் கிழக்குப் பகுதியை கடந்த வாரம்டொமஸ்தாக்கியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சம் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் வீசும் இச்சூறாவளி, ஹெயிட்டி தீவைத் தாக்குவதற்கு முன் அந்நாட்டு மக்களுக்குப் போதுமான சுகாதார மற்றும் தங்கும் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதில் ஐ.நா. தீவிரமாக முனைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக