வெள்ளி, 19 நவம்பர், 2010

நாங்களும் இருக்கிறம். ஈ.என்டி.எல்.எப்(ENDLF)மாரிகாலம் வேறு தெடாங்கி விட்டது. கொசுத்தொல்லைகளும்

ஈ.என்டி.எல்.எப் மாநாடு நடாத்தியிருக்கிறது. 2நாள் மாநாடு. இந்திய அரசு தமிழ்மக்களைப் பாதுகாக்க வேண்டும் என சொல்லியிருக்கிறது. இதைச் சொல்வதற்கு 2நாள் மாநாடு.
இயக்கங்கள் மாநாடு நடாத்துகிற சீசன் இது. ஈ.பி.ஆர்.எல்.எப். புளொட், மாநாடுகள் நடாத்தி முடித்தபின் ஈ.என்.டி.எல்.எப்பும் மாநாடு நடாத்தியிருக்கிறது. இதன் மூலம் நாங்களும் உயிரோடு இருக்கிறம் என சொல்லப்பட்டிருக்கிறது.
பரந்தன் ராஜன் ஈ.என்.டி.எல்.பின் தலைவர். முகம் தெரியாத தலைவர். மாநாடு நடந்த படம் ஒன்று கூட இணையத்தளங்களில் வெளிவரவில்லை. பரந்தன் ராஜனை என்ர உசிர் போவதற்குள் பார்த்து விட ஆசை. ஆனால் முகத்தைக்கூட வெளிக்காட்டாமல் தலைமறைவாக இருக்கிறார். பின்லாடனின் படத்தைக்கூட பார்க்க முடிகிறது. ஆனால் இந்தாளை மட்டும் காண்பதற்கு ஒரு வழியும் கிடைக்கவில்லை. கூகுளில் தேடிப்பார்த்தால் நோர்வே சேது தமிழ்ச்செல்வனோட நிற்கிற படம்தான் வருகிறது. ஈ.என்டி.எல்.எப்பை நாறடிக்க சேது செய்த முயற்சிகள் அதிகம். அதனால் தான் சேதுவின் படம் ஈ;.என்டி.எல:எப் என தேடினால் வருகிறது-
இவ்வளவு நாளும் புலித்தொல்லை இருந்தது தலைமறைவாக இருப்பதற்கான அவசியம ;இருந்தது. இப்பதான் எல்லாம் முடிஞ்சு போச்சு. வரதராஜப்பெருமாள் கூட யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாக நடமாடுகிறார். இன்னும் பரந்தன் ராஜன் ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும்?.
மாற்று இயக்கத்தலைவர்கள் சுதந்திரமாக புலித்தொல்லை இல்லாமல் நடமாடலாம். மக்களைச் சந்திக்கலாம். பிரச்சினை எதுவுமில்லை. ஜே.வி.பிக்கு அடி விழுந்ததற்கு வேறு பல காரணங்கள் இருக்கின்றன. ஜே.வி.பி இனவாதிகள் என புலிகளும் தமிழ்த்தேசிய வாதிகளும் தமிழ்மக்களிடையே மிகப்பெரியளவில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்கள். அதனால்தான் ஜே.வி.பி தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. அரசியல் தீர்வு திட்டத்திற்காக தமிழ்மக்கள் சார்பில் ஜே.வி.பி போராடியிருந்தால் அதில் நியாயமிருந்திருக்கும். போயும் போயும் பத்மினி சிதம்பரநாதன் போன்ற புலிகளுடன் கூட்டு சேர்ந்தால் கோபம் வராமல் இருக்குமா என்ன?. அதனால்தான் யாரோ புலிப்பாணியில் இறங்கியிருக்கிறார்கள். இது ஜே.விபிக்கு விழுந்த அடியல்ல. புலியுடன் கூட்டு சேருகின்ற எவருக்கும் விழுந்த முன்னெச்சரிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது.
சரி அதனை விடுவம். பரந்தன் ராஜன் இப்போ யாழ்ப்பாணம் போனால் எப்படியிருக்கும். யாரும் கணக்கெடுக்க மாட்டார்கள். ஒரு படத்தில் நானும் ரவுடிதான் என தன்னையும் பலவந்தமாக பொலிஸ் ஜீப்பில் ஏத்துமாறு வடிவேல் கெஞ்சுகிற ஒரு காமெடி சீன் அடிக்கடி டி.வியில் ஒளிபரப்புவார்கள். அதுபோல்தான் இருக்கும். பரந்தன் ராஜன் தான் ஈ.என்.டி.எல்.எப் தலைவர் என்று எங்காவது போய்ச்சொன்னால் யாரும் ஏன் எதற்கு எனக் கேட்கமாட்டார்கள். அப்படி ஒரு இயக்கமா சொல்லவேயில்லை எனச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.  இதுதான் இன்றைய நிலமை.
நிலமை இப்படியிருக்கையில் இந்தியா தமிழ்மக்களை பாதுகாக்க வேண்டும் என ஒரு இணர்டு நாள் மாநாடு நடாத்தி நாங்களும் இருக்கிறம் என ஈ.என்.டி.எல்.எப் சொல்லியிருக்கிறது. இனி இணர்டு வருடம் அல்லது மூன்று வருடம் கழித்து இன்னொரு மாநாடு.  இந்தியா தமிழ்மக்களுக்கு உதவவேண்டும் என ஒரு தீர்மானம்.
போங்கடாப்பா! மாரிகாலம் வேறு தெடாங்கி விட்டது. கொசுத்தொல்லைகளும் இனி அதிகமாகிவிடும். இதில நீங்க வேறு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக