வியாழன், 25 நவம்பர், 2010

Dr.Sivabalan:யுத்தம் நடைபெற்ற காலத்தில் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி மக்கள் சென்ற போது புலிகள் சுட்டனர் : வைத்திய கலாநிதி

யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு பொது மக்கள் செல்ல முற்பட்ட போது புலிகள் பொது மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக வைத்திய கலாநிதி சிவபாலன் தெரிவித்தார்.கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையிலேயே சிவபாலன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பொது மக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்ல முற்பட்ட பொதுமக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
எனவேதான் பொது மக்கள் இரவு நேரத்தில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கிச் சென்றனர். ஆனால் இராணுவத்தினர் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக