செவ்வாய், 9 நவம்பர், 2010

மோகனகிருஷ்ணன் சுட்டுக்கொலை-மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

கோவை: இவ்வளவு சீக்கிரம், கோவை போலீஸார் எங்களது வேதனைக்கு தீர்வு காண்பார்கள் என நினைக்கவில்லை. கமிஷனர் சைலேந்திர பாபு மூலமாக எங்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. நரகாசுரனான மோகனகிருஷ்ணன் கொல்லப்பட்ட இன்றுதான் எங்களுக்குத் தீபாவளி என்று கோவை சிறார்கள் முஷ்கின், ரித்திக்கின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

கோவை சிறார்களை கொடூரமாகக் கொலை செய்த மோகனகிருஷ்ணனை கோவை போலீஸார் இன்று அதிகாலையில் என்கவுன்டர் மூலம் வீழ்த்தினர். இதை கோவை சிறார்களின் பெற்றோரான ரஞ்சித் ஜெயின் தம்பதி வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி. எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின், ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி. கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம்.

இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும் என்று தெரிவித்தனர்.

மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்:

இதேபோல முஷ்கின், ரித்திக் ஆகியோரது வீடு உள்ள ரங்கே கெளடர் வீதியில் வசிக்கும் மக்கள் மோகன கிருஷ்ணனின் மரணத்தை தீபாவளி போல பட்டாசு வெடித்துக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Elangovan - Kuwait,குவைத்
2010-11-09 13:35:48 IST
நல்ல தீர்வு, சட்டம் ஒரு இருட்டறை குற்றவாளியை அதன் முன்னால் நிறுத்தினால் குளிர்காய்ந்து கொண்டிருப்பான் என்பதை உணர்ந்து செயல்பட்ட திரு சைலேந்திரபாபு அவர்களுக்கு நம் நாட்டு மக்கள் எல்லோர் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சட்டங்கள் கடுமையாக்க பட வேண்டும்....
BALAMURUGAN - JOHOR,மலேஷியா
2010-11-09 13:35:11 IST
இந்த காமகொடூரன் செய்த செயலுக்கு பூலோகத்திலே இவனுக்கு encounter வழங்கப்பட்ட சைலேந்திர பாபு-க்கு நன்றி. இவனுக்கு இருக்கு இன்னும் தண்டனை அங்கே...அந்த குழந்தைகளிடம்..அதான்....இவனுக்கு நரம்பு சுளுக்கு....நரக வேதனை....மேலே இருந்துகொண்டு அந்த குழந்தைகள் பார்க்குதுங்க...பார்த்துக்குங்க குழந்தைகளா! இவனை நரகத்திலே தள்ளி இவனுடைய ஆன்மாவையும் சும்மா விட்டுவிடதிங்கா குழந்தைகளா... (இவனையெல்லாம் அப்படியே உயிரோடு வைத்து சித்திரவதை செய்து, அந்த குழந்தைகள் பட்ட துன்ப வேதனைகளையெல்லாம் இவன் அனுபவிக்காமல் ஒரே encounter லே போய்ட்டான் என்கிற ஆதங்கம் தான் வருது)...
எ. பாபு - UK,இந்தியா
2010-11-09 13:33:24 IST
எனது நெஞ்சார்ந்த நன்றிகள் திரு சைலேந்திர பாபு அவர்களின் டீம்மிற்கும் ....
கணபதி - ஜப்பான்,இந்தியா
2010-11-09 13:32:19 IST
வாழ்த்துக்கள் திரு சைலேந்திர பாபு ! வெல் டன் !...
சிவா - சென்னை,இந்தியா
2010-11-09 13:29:54 IST
இது போல கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு குழந்தைய ஒரு பொண்ணு கொன்னு போட்ட அவ பேரு புவிழலி'ன்னு நினைகரன். அவளையும் இப்படி போட்டு தள்ள முடியுமா???????? அப்படி போட்டு தள்ள ஆண்டவனை வேண்டுகிறேன். கோவை போலீஸ்'கு என்னுடைய ஆயிரம் நன்றிகள்....
இஸ்மாயில் sirupakkam - dubai,இந்தியா
2010-11-09 13:29:13 IST
உங்களின் செயல் பாராட்டுக்குரியது ஒட்டுமொத்த Dubai வால்இந்திய தமிழர்களின் சார்பில் காவல் துரை நண்பர்களுக்கு நன்றி எஞ்சிய ஒரு கயவனையும் விட்டுவைகதிர்கள் வெகு வரைவில் எதிர்பாக்கும் காவல்துரை நண்பன் மீண்டும் யானது சிரம்த்ழழ்ந்த வாழ்த்துகள்......
selva - coimbatore,இந்தியா
2010-11-09 13:28:49 IST
ஆல் தமிழன்ஸ் ஒன்று சேர்வோம். எழுதுங்கள் சீப் மினிஸ்டருக்கு கோயம்புத்தூர் போலிசை பாராட்டி கமிஷ்நேர் சைலேந்திர பாபு தனது திறமையால் மக்கள் மனதை கவர்ந்து விட்டார் ஹாட்ஸ் ஆப் சார்...
HAJA - KUMBAKONAMDUBAI,இந்தியா
2010-11-09 13:28:16 IST
N COUNTER SAILENTHIRA BABU, PLEASE TAKE IMMIDIATLY ACTION DON'T WEAST TIME FOR THIS SAME N COUNTER SPECILIST SAILAENTHIRA BABU WAAZLGA....
2010-11-09 13:27:30 IST
என்கவுண்டர் செய்தது சரிதான்! ஆனால் கொன்ற இருவரையும் சேர்த்து இரு பள்ளி குழந்தைகளும் தள்ளிவிட்ட அதே கால்வாயில் கல்லைக்கட்டி தள்ளிவிட்டு கொன்றிருந்தால் நலமாஇருந்த்திருக்கும் !...
albin - Abudhabi,இந்தியா
2010-11-09 13:27:13 IST
இந்த தீர்ப்பு அருமையானது இதை போல் எண்ணுபவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பிக்கும் Thanks Tamilnadu iam proud of You...
THIRUKKUMAR - KALAIYARKOIL,இந்தியா
2010-11-09 13:26:10 IST
Thanks to police...
viji - coimbatore,இந்தியா
2010-11-09 13:25:24 IST
hats off to tamil nadu police. well done, You are truly brave....
ச.நாகேஸ்வரன் - பொள்ளாச்சிcoimbatore,இந்தியா
2010-11-09 13:24:52 IST
nanpeenda நம்ம போலீஸ் அண்ணாதுரை...
S.Bhagrudeen - Riyadh.SaudiArabia.,இந்தியா
2010-11-09 13:24:29 IST
அம்மா இல்லத்தரசி விருதுநகர் சுலோச்சனா உன் வீட்டில் இது மாதிரி நடந்திறந்தால் இந்த மாதிரி பேசி இருக்க மாட்டாய். போலீஸ் செஞ்சது சரியே . இப்பலுதான் சவுதி அரேபியா மாதிரி தண்டனை கொடுத்து இருக்க்கிறார்கள் .வெல்டன் கோவை போலீஸ் .இது மாதிரி தமிழ் நாடு அனைத்திலும் இந்த மாதிரி குற்றங்கள் எல்லாதிற்கும் இதை மாதிரி கொடுக்கவேண்டும்...
ஷ்.பாபு - டுடிகோரின்,இந்தியா
2010-11-09 13:23:21 IST
போலீசாரின் முடிவை பாராட்டுகிறோம்...
sampath - coimbatore,இந்தியா
2010-11-09 13:23:16 IST
வாழ்த்துக்கள் சைலேந்திர பாபு ......
சுரேஷ்குமார் - Coimbatore,இந்தியா
2010-11-09 13:22:10 IST
அரசன் அன்றே கொல்வான். போலீஸ் (தெய்வம்) நின்று கொள்ளும். நன்றி. கோவை மக்களுக்கு தீபாவளி 5 ம் தேதி அல்ல. இன்று தான் உண்மையான தீபாவளி....
முத்துராம் - மதுரை,இந்தியா
2010-11-09 13:21:28 IST
கோவை போலீஸ்க்கு எனது வாழ்த்துகள்....
ஸ்ரீதர் சுப்பிரமணி - டர்பன்,தென் ஆப்ரிக்கா
2010-11-09 13:21:15 IST
போலீஸ் துறை முதல்வர் கட்டுபாட்டில் இருக்கிறது எனவே இது என் தானை தலைவரோட உத்தரவின் படியே நடந்திருக்க வேண்டும். குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு இது ஒரு சின்ன ஆறுதல். இதை தைரியத்துடன் செயல்படுத்திய தமிழ்நாடு போலிசுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை. சில அதிமேதவிங்க எப்பவுமே கலைஞர் குறை சொல்லிட்டே இருபின்களே இப்ப எங்க போனிங்க... கேட்ட இதுக்கும் கலைங்கருக்கும் சம்பதம்மே இல்லைம்பாங்க இதுவே அவங்களோட அறியாமை. எனது ஆழ்ந்த அனுதாபங்களை அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தெரிவித்து கொள்கிறேன்....
krishnaamma - bangalore,இந்தியா
2010-11-09 13:21:05 IST
ரொம்ப நல்ல செயல். hats off to police :)...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக