புதன், 1 டிசம்பர், 2010

மட்டக்களப்பில் நிறநிற பாம்புகள் - மீண்டும் பேரழிவுக்கு அறிகுறியா? - மக்கள் பீதி

மட்டக்களப்பு கல்லடிப் பாலம் அமைந்துள்ள வாவியில் தற்போது ஒருவகைப் பாம்புகள் பெருந்திரளாக ஒதுங்குகின்றன. இவற்றைப் பார்ப்பதற்காக கல்லடிப் பாலத்திற்கு மக்கள் கூட்டம் படையெடுக்கின்றது.
கடந்த 2004 ஆம் ஆண்டு இதே மாதம்தான் இவ்வாறான பாம்புகள் திரள் திரளாக இந்த வாவியில் காணப்பட்டன
அதன் பிறகுதான் சுனாமி பேரழிவும் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்காண மக்களைக் காவுகொண்டது.
இவற்றைக் காண மழையையும் பொருட்படுத்தாது பெருமளவிலான மக்கள் கூடியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இன்று மாலை முதல் வாவியில் நீந்தும்  வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும் இப்பாம்புகள்   4 அடி  நீளமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கல்லடிப்பாலத்தின் கீழுள்ள வாவியில் பெருளவிலான பாம்புகள் நீந்தி ஓடுவது இது இரண்டாவது தடவையாகும். இவ்வாறு கடந்த 2004ம் ஆண்டும் இலட்சக்கணக்கான பாம்புகள் வாவியில் நீந்தின. இவ்வாறு பாம்புகள் தென்பட்டு 5 மாதங்களில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதும்  குறிப்படத்தக்கது.
இதனால் இப்பாம்புகள் வெளியானதன் பின்னர் இம்மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக