புதன், 17 நவம்பர், 2010

அ.தி.மு.க.வுடன் டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணி வைத்திருப்பது தி.மு.க.வை கொஞ்சம் உலுக்கி

அ.தி.மு.க.வுடன் டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணி வைத்திருப்பது தி.மு.க.வை கொஞ்சம் உலுக்கி இருக்கிறது. ஒரு காலத்தில் அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கியாக இருந்தது தலித் ஓட்டுக்கள்தான்.கொடியன்குளம் சம்பவத்துக்குப் பின் டாக்டர் கிருஷ்ணசாமியின் பின்னால் அணி வகுத்தது.

இப்போது இருவரும் ஒன்று சேர்ந்து இருப்பது தி.மு.க.வை கலக்கிவிட்டது.

தென் மாவட்டத்தில் தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.யான சங்கரன்கோயில் தங்கவேலுவை முழு வேகத்தில் களம் இறக்கத் தயாராகி வருகிறது. அவர் மூலம் தேவேந்திர குல சமுதாய மக்களை தி.மு.க. பக்கம் இழுக்க அவரை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

‘‘தேவேந்திர குல மக்களுக்காக இந்த அரசு எவ்வளவோ செய்து இருக்கிறது. அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல சுற்றுப்பயணம் செய்ய திட்டம் தயாராக இருக்கிறது. தலைவர், துணை முதல்வர் அனுமதிக்காகக் காத்திருக்கிறேன்’’ என்றார்.

தி.மு.க.வில் ஒரு ஜாதி ஓட்டுக்காக எம்.பி.யை சுற்றுப்பயணம் செய்யச் சொல்வது இதுதான் முதல்முறை என்கிறார்கள் மூத்த தி.மு.க.வினர்.

கிருஷ்ணசாமி தரப்போ, ‘‘தங்கவேலு சுற்றுப்பயணம் செய்வதில் தப்பில்லை.

டாக்டர் பற்றி பேசினால் இருக்கு கச்சேரி...’’ என்று வரிந்து கட்டுகிறது.

- ஆதவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக