திங்கள், 22 நவம்பர், 2010

ராஜினாமா செய்யாமல் எடியூரப்பா அடம்பிடிக்கிறார்

நில மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. ஆனால், முதல்வர் பதவியிலிருந்து விலக மறுத்து, எடியூரப்பா அடம்பிடிக்கிறார். "எனக்கு 120 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. எனக்கு பதிலாக வேறு ஒருவர் முதல்வராக நியமிக்கப்படுவாரா, என்ற கேள்விக்கே இடம் இல்லை' என, பா.ஜ., மேலிடத்துக்கு, எடியூரப்பா சவால் விடுத்துள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அரசுக்கு சொந்தமான நிலத்தை தனது மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக, மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. "எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, அந்த கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதில் மற்றொரு திருப்பமாக, எடியூரப்பா சார்பில் நடத்தப்பட்ட பணப்பரிமாற்றங்கள் குறித்த  வங்கிக் கணக்கு தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.பார்லிமென்டில் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை எதிர்த்து தீவிரமாக போராடி வரும் பா.ஜ.,வுக்கு, எடியூரப்பாவின் நில ஊழல் பிரச்னை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் ஆகியோர் நேற்று டில்லியில் ஆலோசனை நடத்தினர்.

இதில், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், கட்சித் தலைவர் நிதின் கட்காரிக்கு அளிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.இந்த கூட்டத்தில், எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்தால், அவருக்கு பதிலாக யாரை நியமிப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கர்நாடாகாவில் மிகச் செல்வாக்கான வீரசை லிங்காயத்  பிரிவினர் ஆதரவுடைய அவரை  அகற்றுவது என்பது சுலபமல்ல என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எடியூரப்பாவின் தலைமையை மாற்றினால், அதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

எடியூரப்பாவிற்கு பதிலாக, லிங்காயத் இனத்தைச் சேர்ந்தவரான ஜெகதீஷ் ஷெட்டரை நியமிப்பதா? அல்லது பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஈஸ்வரப்பாவை நியமிப்பதா? என்பது குறித்தும் ஆலோசனை நடந்தது. எவ்வித ஊழல்களிலும் சிக்காத டாக்டர் ஆச்சார்யா அல்லது சுரேஷ் குமார் ஆகியோரை பதவியில் நியமிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.கட்சியின் மற்றொரு தரப்பினர், எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும், பிரச்னையை சமாளிக்க, எடியூரப்பாவுக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அடம்பிடிக்கிறார்இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, எடியூரப்பா அடம்பிடித்து வருகிறார். நேற்று, எடியூரப்பாவின் வீட்டில், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதன்பின், நிருபர்களிடம் எடியூரப்பா கூறியதாவது:கட்சித் தலைமை என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. எனவே, டில்லிக்கு யாரும் செல்லவேண்டாம் என, எம்.எல்.ஏ.,க்களிடமும், அமைச்சர்களிடமும் தெரிவித்துள்ளேன். எனக்கு ஆதரவாக 110ல் இருந்து, 120 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். வெறும் 20 பேரையோ, 40 பேரையோ வைத்துக் கொண்டு நான் அரசியல் நடத்தவில்லை. எனக்கு பதிலாக யார் முதல்வராக தேர்வு செய்யப்படுவர் என கேட்கின்றனர். எனக்கு பதிலாக நான் தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்க மறுத்து, எடியூரப்பா அடம்பிடிப்பதால், பா.ஜ., மேலிடத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால், கர்நாடக பா.ஜ.,வில் பிளவு ஏற்படுமோ என, பா.ஜ., தலைவர்கள் அஞ்சுகின்றனர். தென் மாநிலங்களில் முதலாவதாக ஆட்சியை  பிடித்ததை இழக்க விருப்பமின்றியும், அதே சமயம் கட்சிக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை அகற்றமுடியாமலும் மேலிடம் இக்கட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

எடியூரப்பாவை மாற்றாதது ஏன்? மாநில பா.ஜ., தலைவர் விளக்கம்  : ""முதல்வர் எடியூரப்பாவை மாற்ற வேண்டாம். தாலுகா, உள்ளாட்சி தேர்தல் வரும் இந்நேரத்தில் முதல்வர் மாற்றம் தேவையில்லை என்று கூறியுள்ளேன்,'' என கர்நாடகா மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா கூறினார்.

ஷிமோகாவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:எடியூரப்பாவை மாற்றக்கூடாதென்பது தான் எனது முடிவு. இதையே மேலிடத்தில் கூறியுள்ளேன். ஆயினும் மேலிடம் எடுக்கும் முடிவை நான் ஏற்றுக் கொள்வேன். நான் முதல்வர் வேட்பாளர் இல்லை. அந்த எண்ணம் எதுவும் இல்லை. நான் யாரிடமும் முதல்வர் வேட்பாளர் என்று கூறவில்லை. பா.ஜ.,வில் மாநில தலைவர் முதல்வராக வேண்டும் என்ற மரபு இல்லை.முதல்வர் எடியூரப்பாவை மாற்ற வேண்டாம். தாலுகா, உள்ளாட்சி தேர்தல் வரும் இந்நேரத்தில் முதல்வர் மாற்றம் தேவையில்லை என்று கூறியுள்ளேன். வெறும் 28 உறுப்பினர்களை கொண்டுள்ள ம.ஜ.த.,வில், ரேவுண்ணா துணை முதல்வர், குமாரசாமி மத்திய அமைச்சர் என கனவு காண்கின்றனர்.இவ்வாறு ஈஸ்வரப்பா கூறினார்.

 எடியூரப்பா அரசை கவிழ்க்க நடந்த சதி : அமைச்சர் நடத்திய ஆலோசனை அம்பலம் : கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அசோக் சர்மா என்பவருடன் தனியார் ஓட்டல் ஒன்றில் எடியூரப்பா அரசை கவிழ்க்க திட்டம் தீட்டியுள்ளது வெளிச்சத்திற்கு தெரியவந்துள்ளது.
அசோக் சர்மா, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் நடத்திய பேச்சு தற்போது "சிடி' யாக வெளியாகி உள்ளது.
அதன் விவரம்:
அசோக் சர்மா:
நான் கவர்னருக்கு மிகவும் நெருக்கமானவன். அவர் மூலம் எடியூரப்பா அரசை கவிழ்க்க முடியும். இதை நீண்ட நாட்களுக்கு முன்பே செய்திருக்க முடியும்.
ஜனார்த்தன ரெட்டி: ஏன் இன்னும் எடியூரப்பா அரசை கவிழ்க்காமல் இருக்கிறீர்கள்.
அசோக் சர்மா: நான் உங்களின் ஆலோசகராக இன்று இருக்கிறேன். ஒரு பெரிய தொகையை கொடுத்தால், எடியூரப்பா அரசை கவிழ்த்து விடுவேன்.
ஜனார்த்தன ரெட்டி: 20 கோடி ரூபாய் தருகிறேன். முதல் தவணையாக 15 கோடி ரூபாய் கொடுக்கிறேன்.இப்படி போகிறது உரையாடல்.

எடியூரப்பாவை நீக்கி விட்டு, அனந்தகுமாரை முதல்வராக்க ஜனார்த்தன ரெட்டி முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. இந்த முயற்சி ஏன் வெற்றி பெறவில்லை என்று தெரியவில்லை.
easwar - திருச்சி,இந்தியா
2010-11-22 10:13:57 IST
எடியுரப்பா நீக்க பட வேண்டியவர். அதற்காக ராஜா விஷயத்தை மறந்து எட்டியுரப்ப விஷயம் பெரிதாக இப்போது சொல்வது மீடியா தர்மத்துக்கு உகந்தது இல்லை. எதற்கு தலைப்பு செய்தி வேண்டுமோ அது வரவே இல்லை....
manoharan - chennai,இந்தியா
2010-11-22 09:17:36 IST
நீங்கள் செய்வது ரொம்ப சரி. ஜெயாவை இதை விட மோசமானா டான்சி வழக்கில் விடுவிக்க உதவிய அத்வானி இதிலும் உதவட்டும்....
சுந்தர் - chennai,இந்தியா
2010-11-22 08:19:58 IST
கலைஞர் ராஜினாமா செய்தால் நானும் செய்வேன்....
சில்லு வண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-11-22 08:19:57 IST
அதுதான் ஊழல் பண்ணியாச்சு என்று நாடே அறிந்த விஷயமாச்சு;இனி என்னவாம் வீராப்பு;பொத்திக்கினு ராஜினமா பண்ண வேண்டிதானே?பாருங்க அப்பு எங்க ராசாவும் இப்படித்தான் உங்களை போல் அடம் பிடித்தாறரு.பிறகு பொசுக்குனு ராஜினாமா லெட்டரை கொடுத்து புட்டாரு. உடனே எங்க அம்மா சொல்லி புடுச்சு நான் கொடி பிடித்ததால் தான் இந்த ராஜினாமா செய்தார் என்று ஊரு பூராவும் சொல்லி கொண்டு திருக்கிறது;அதனால் நீங்க உடனே ராஜினாமா பண்ண வில்லை என்றால் இதுபோல் ஒருத்தன் சொல்லி கிட்டு திரிவானுக பாருங்க இந்த நாட்டிலே;;;;;;;;அம்புட்டுதான் நாங்க சொல்லிபுட்டோம்;;;;;;...
சரவணன் - சென்னை,இந்தியா
2010-11-22 07:41:56 IST
பதவி ஆசை யார தான் விட்டுது!!!!!!!!!!...
பச்சைத்தமிழன் சுரேஷ் - பரமக்குடிமலேசியா,இந்தியா
2010-11-22 07:03:45 IST
அரசியல்வாதிகள் என்றாலே பதவி ஆசை பிடித்தவர்கள் தான். இதற்கு நம்ம ஆளு மட்டும் என்ன விதிவிலக்கா....
லொடுக்கு பாண்டி - கோவை,இந்தியா
2010-11-22 06:20:45 IST
மிஸ்டர் எடியுரப்பா...நீங்க கொஞ்சம் மூட்டை முடிச்சோடு வீட்டுக்கு போங்க. நாங்க ஊழலை கண்டு வெதும்பி நடுங்கி கொண்டு இருக்கிறோம். உங்கள் ஆட்சியில் தினம் தினம் பிரச்சனைதான். தற்போது உங்கள் மீதே ஊழல் ஆணித்தரமாக நிருபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வெளியே போவதே இந்தியாவுக்கு நல்லது. மெல்ல மெல்ல நம் மேல் உள்ள அழுக்கை துடைக்க வேண்டும்....
pnsankararaman - srirangantiruchchiraappalli,இந்தியா
2010-11-22 05:17:19 IST
There is a proverb in English as follows:-"CEASER'S WIFE SHOULD BE BEYOND SUSPECION'.Mr.Eddiyoorappaa may be honest,straightforward.But,he too is not indispensible.Nobody is above the organisation he represents.So, he should quit if the organisation says so.That will create a good precedent....
2010-11-22 02:58:49 IST
பா.ஜ.க சந்தர்ப்பவாத மதவாத அரசியல் வாதிகள் ஒன்னும் புடுங்க முடியாது. பேச்சுதான் பெரூசு. இவனுங்க ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி பேசுவது கொடுமை . ஊழல் செய்றவனுக்கு சைனா காரன்மாதிரி தூக்குதண்டன குடுத்தா ? ஒரு பய கொள்ள அடிப்பணா? இவனுங்க விபச்சாரிய விட கேவலமான ஜென்மங்கள். அரசியல் வியாதிகளா திருந்துங்கள் இல்லை என்றல் திருத்தபடுவீர்கள் ....
smile - Dammam,சவுதி அரேபியா
2010-11-22 01:21:54 IST
ALL THE LEADERS ARE BLACKSHIP EXCEPT SOME ARE WHITE.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக