திங்கள், 15 நவம்பர், 2010

போலி பண நோட்டுக்களுடன் யாழ் முஸ்லிம்கள் சென்னையில் கைது

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட போலி பண நோட்டுக்களுடன் - யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இரு இலங்கை முஸ்லிம்கள் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளாக இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணைகள் நடத்தப்படுவதாக இந்தியப் பொலிசார் தெரிவித்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்தை நேற்று வந்தடைந்த உடன்பிறப்புக்களான இரு முஸ்லிம்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கள்ள நோட்டுக்களுடன் விமான நிலையத்துக்கு அருகில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக