| ஜோர்தானில் பணிபுரிந்த இலங்கைப் பெண்ணொருவர் ஆறு ஆணிகளை விழுங்குவதற்கு வீட்டு எஜமானியினால் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மற்றொரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. |
| ஜோர்தானின் தலைநகர் அம்பானிலுள்ள டி.எம். சந்திமா என்ற இலங்கைப் பெண் ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை பார்க்கச் சென்றிருக்கிறார். தனக்கு வேலை வழங்கியவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் ஆணிகளை விழுங்குமாறு நிர்ப்பந்தித்ததாகவும் கூறியுள்ளார். நான் அவரை ஆஸ்பத்தரிக்கு கொண்டு சென்றேன். அவரைப் பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்றே எடுக்கும்படி கூறினார்.அவருடைய வயிற்றில் ஆறு ஆணிகள் இருந்தமை அறிக்கையில் வெளிப்பட்டது. எவ்வாறாயினும் அவரிடமிருந்து ஆணிகள் வெளியேறிவிடுமென கூறப்பட்டது. என அம்மானிலுள்ள இலங்கைத் தூதரக தொழிற்பிரிவைச் சோ்ந்த அதிகாரி கேமந்த விஜயரட்ன தெரிவித்துள்ளார். இந்தப் பெண்ணை பரிசோதிப்பதற்காக கொழும்பிலிருந்து அம்மானுக்கு மருத்துவர்கள் சென்றுள்ளனர். அவர்களின் அறிக்கைக்காக காத்திருப்பதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தைச் சோ்ந்த அதிகாரிகனள் கூறியுள்ளனர். இதேவேளை தனது மனைவியை வீட்டுக்கு கொண்டுவருமாறு சந்திமாவின் கணவர் சுனில் சாந்த என்பவர் அதிகாரிகளிடம் கோரியுள்ளார். கடந்த வாரம் குவைத் நாட்டிலிருந்து நாடு திரும்பிய குருநாகலைச் சோ்ந்த தமிழ்பெண்மணி ஒருவரின் உடம்பிலிருந்து சத்திரசிகிச்சை மூலம் 9 ஆணிகள் அகற்றப்பட்டிருந்த ஒருசில தினங்களின் பின் இவ்வாறான மற்றொரு அவலச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக