திங்கள், 1 நவம்பர், 2010

ஸ்திரேலியப் பயணத்தில் கடலில் உயிரிழந்தவர்கள் – பெயர் விபரம் வெளியாகியது


அவுஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்காக மேற்கொண்ட சுமார் ஒன்றரை மாத படகு பயணத்தின் போது கடந்த ஒக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் பெயர் விபரங்கள் தெரியவந்துள்ளன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான ஜக்ஸன் (வயது 24) மற்றும் டிசான் (வயது 26), கிளிநொச்சி மாவட்டத்தின் உதயபுரம் நகர்ப் பகுதியை சேர்ந்த ரகுமார் செல்வரஞ்சினி ஆகியோரே இறந்தவர்கள் ஆவர்.
நடுக் கடலில் சிக்கியபோது மீன்பிடிப்படகு ஒன்றை கண்ட ஜக்ஸன் அப் படகில் சென்றுகொண்டிருந்தவர்களிடம் உதவி கோருகின்றமைக்காக உயிரைப் பணயம் வைத்து கடலில் குதித்தார்.     நீந்திச் சென்று அம் மீன் பிடிப் படகை அடைகின்றமை அவரின் நோக்கமாக இருந்தது. எனினும் அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். படகோட்டியின் உதவியுடன் கட்டுமரம் ஒன்று கட்டப்பட்டது.
இக்கட்டு மரத்தில் சென்று அருகிலுள்ள ஏதேனும் ஒரு சிறிய தீவை சென்றடையலாம் என்ற நம்பிக்கையில் படகோட்டியும், டிசானும் பயணித்தனர். இடையில் கட்டுமரம்   கடலில் மூழ்கத் தொடங்கியது.   படகோட்டி ஒருவாறு நீச்சல் போட்டு தப்பினார். டிசான் உயிரிழந்துவிட்டார்.
இந்தோனேசியாவின் பனைடான் தீவை இவர்கள் சென்றடைந்தபோது கரை ஒதுங்குகையில் கருங்கல் பாறை ஒன்றுடன் தலை மோதுப்பட்டு செல்வரஞ்சினி உயிரிழந்தார். இவர் ஒரு குழந்தையின் தாய். இவர்கள் மன்னாரிலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி படகொன்றில் புறப் பட்டிருந்தனர்.    இந்தியாவுக்கு அருகிலுள்ள கடல் பகுதி ஒன்றை இரு நாட்களில் சென்றடைந்தனர். இந்தியாவிலிருந்து வந்து இணைந்து கொண்ட இலங்கைத் தமிழர்கள் ஒரு தொகையினரையும் சேர்த்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர்.
15 குழந்தைகள் 14 பெண்கள் 66 ஆண்கள். உண்ண உணவில்லை. குடிக்க நீரில்லை. கரை ஒதுங்க வழியில்லை. உதவிக்கு வேறு ஆட்கள் இல்லை. மூவர் மரணமடைந்த நிலை யில் கடந்த 14ஆம் திகதி பனைடான் தீவை சென்றடைந்தனர்.   அங்கு பசிக் கொடுமையால் நத்தைகளைக் கூட சாப்பிட்டிருக்கின்றனர்.   இவர்களை இந்தோனேசிய கடற்படையினர் கடந்த 19ஆம் திகதி நள்ளிரவு நேரம் காப்பாற்றினர்.
மறுநாள் இவர்கள் தலைநகர் ஜகார்த்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டு மிகவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சிறைவைக் கப்பட்டுள்ளார்கள். இத்தகவலை சிறையிலிருக்கும் ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக