செவ்வாய், 2 நவம்பர், 2010

வைகோ தனது கருத்தை மறுபரிசீலனைசெய்ய வேண்டும்:ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,  ‘’நாடு முழுவதும் வருகிற 8-ந்தேதி அமெரிக்க அதிபர் ஒமாபா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரிகள் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம். ஆனால் டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் இடது சாரி எம்.பி.க்கள் கலந்துகொள்வார்கள்.
ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கைவிட வேண்டும் என்று கூறி உள்ளார். நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் விரோத போக்கை எதிர்த்து இடதுசாரிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றது.

தமிழ்நாட்டில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் ம.தி. மு.க., இடதுசாரி இயக்கங்கள் இணைந்து பங்கேற்று வருகிறது.

இந்தியா வரும் ஒபாமாக தனி நபராக வரவில்லை. அவருடன் 200-க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களும் வருகிறார்கள்.

அமெரிக்காவின் தனியார் மய கொள்கையை இந்தியாவில் திணிக்க வரும் ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வைகோ தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் சிமெண்ட் விலை உயர்வால் கட்டிட பணிகள் பாதிப்படைந்துள்ளது. இதை தமிழக அரசு உடனடியாக சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்து இடதுசாரி, அ.தி.மு.க, ம.தி.மு.க. ஆகியவை போராட்டம் நடத்தி வருகிறது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் இடது சாரி இயக்கம் முடிவு எடுக்கும்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக