-மன்னார் நிருபர்
மன்னார் மாவட்டத்தில் காணமல் போன,கடத்தப்பட்டவர்களின் நிலமைகள் இதுவரை என்னவென்று தெரியாத நிலையில் அவர்களின் உறவுகள் அல்லலுற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் நல்லினக்க ஆணைக்குளுவின் விசாரனைகள் மன்னாரில் இடம்பெற்றால் உறவுகளைத்துளைத்த உறவினர்கள் சிறிதெனும் திருப்தி அடைய முடியும் என மன்னார் ஊடகவியலாளரும் மன்னார் மாவட்ட மனித உரிமைகள் பாதுகாவளருமான எஸ்.ஆர்.லெம்பட் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் காணமல் போனவர்களின் நிலை என்ன? இவர்கள் எங்கிருக்கின்றார்கள்?என்பதினை சர்வதேசச் சமூகம் கண்டறியப்பட வேண்டிய ஒரு கடற்பாடு காணப்பட்டது.இவர்களின் நிலமை தொடர்பாக உறவுகள் அரசுக்கு பல தடவைகள் பல வழிகளில் எடுத்தக்காட்டியும் இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை.கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான வரையிலான காலப்பகுதிக்குள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 100ற்கும் மேற்பட்டவர்கள் காணமலும்,கடத்தவும் பட்டுள்ளனர்.
இவர்களின் சிலர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.எனினும் பலரது நிலமை என்னவென்று இதுவரை தெரியவில்லை.இவர்கள் எங்கு இருக்கின்றார்கள்,ஏன் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது கூட எவருக்கும் தெரியாத நிலையில் உள்ளது. கடத்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு சட்டத்தின் பிரகாரம் தன்டனை வழங்கப்பட வேண்டும். இவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்று தெரியாமல் காணமல் போனவர்களின் தாய்,தந்தை,மனைவி,பிள்ளைகள் தினம் தினம் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களின் எதிர்காலம் என்ன? இவர்களை தேடித் தேடி உறவுகள் தமது வாழ்நாளை கழித்து வருகின்றனர்.இவர்கள் கடத்தி வைக்கப்பட்டது எதற்காக?கடத்தியவர்கள் நல்லென்னத்துடன் இவர்களை மீண்டும் சட்டத்தின் முன் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.வருடக்கனக்கில் தமது உறவுகளைப் பார்க்காமல் துடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் கொடுக்க வேண்டும்.
இவைகள் எல்லாவற்றையும் நடைபெற மன்னார் மாவட்டத்தில் உள்ள மனித உரிமைகள்,தன்னார்வத்தொண்டு அமைப்புக்கள் கவனம் செலுத்தி நல்லினக்க ஆனைக்குளுவின் பிரசன்னத்தை மன்னாரில் ஏற்படுத்தும் வகையில் இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என்ற தீர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக