திங்கள், 29 நவம்பர், 2010

வெயிலுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு

வெயிலுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு
சூரிய வெளிச்சத்துக்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளதுஎன இந்திய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனித உடலில், கணையப் பகுதியில் சுரக்கும்இன்சுலின் ஹோர்மோன், இரத்தத்தில் உள்ள சீனியின் அளவை சீர் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. “இன்சுலின்சுரக்க, “கல்சியம் மற்றும் விட்டமின் டிஅவசியம். இவற்றின் அளவு குறையும் போது இரத்தத்தில் உள்ள சீனியின் அளவு உயர்ந்துநீரிழிவு நோய்ஏற்படுகிறது. இந்தியாவில் நீரிழிவு நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உணவுக் கட்டுப்பாடு, மாறுபட்ட வாழ்க்கை முறைகள், உடல் பருமன் மற்றும் மரபணு, மன அழுத்தம் போன்றவையே இதற்கு காரணம். பால் சார்ந்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட தானியங்கள் மற்றும் எண்ணெய் வகைகள், கொழுப்பு நிறைந்த மீன்கள் ஆகியவற்றில்விட்டமின் டிநிறைந்துள்ளது.
மாலை நேர வெயிலில் இருப்பதாலும் உடலில்விட்டமின் டிஉற்பத்தி செய்யப்படுகிறது. புதுடில்லி போர்டிஸ் வைத்தியசாலை மருத்துவர்கள் குழு ஒன்று இது பற்றி ஆய்வில் ஈடுபட்டது. இரத்தத்தில் உள்ள சீனிக்கும் வெயிலுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
ஆய்வுக்கு தலைமை வகித்த வைத்தியர் அனூப் மிஸ்ரா இது குறித்து கூறியதாவது, இன்றைய அளவில் நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். கல்சியம் மற்றும் விட்டமின்டிகுறைபாடுகள் தான் இதற்கு காரணம்.
மாலை நேரத்தில் வெயிலில் காய்பவர்களுக்கு அல்லது விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்பவர்களின் உடலில் விட்டமின் டி உற்பத்தியாகும் என கூறப்படுகிறது. இது பற்றிபோர்டிஸ்மருத்துவமனையில் உள்ள 184 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 92 பேர் இரண்டாம் வகை நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்கள்.
ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது பாலினம் மற்றும் உடல் எடை போன்றவை கணக்கெடுக்கப்பட்டன. அனைவரும்விட்டமின் டிகுறைபாடு உடையவர்கள். மாலை நேரங்களில் இவர்களை விளையாட்டுப் பயிற்சிகளில ஈடுபடுத்தினோம்.
அதன்பின் அவர்கள் உடலில்விட்டமின் டிஅளவு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாலை வெயிலில் 30 நிமிடங்கள் இருந்தால் தேவையானவிட்டமின் டிநமக்கு கிடைக்கும். இது பற்றி மேலும் தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளோம் என்று மிஸ்ரா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக