'மங்காத்தா' படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா விளையாடு மங்காத்தா என்ற அஜீத்தின் அறிமுகப் பாடலை செம லோக்கலாக கொடுத்துள்ளார். இந்தப் பாடலின் படப்பிடிபிற்காக பாங்காங் பறந்துள்ளது படக்குழு. இந்த பாடலுக்கு கல்யான் நடனம் அமைக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடன இயக்குனர்.
அஜீத்துடன் ஜி, கிரீடம் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறார் திரிஷா. அதுமட்டும் இல்லாது லக்ஷ்மி ராய்க்கும் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் இருக்கிறதாம். சில படங்களில் தாராளம் காட்டியும் லக்ஷ்மி ராய்க்கு சினிமாவில் தனக்கென ஒரு இடம் இல்லாதது ரொம்பவும் வருத்தம். அஜித்துடன் சேர்ந்து நடிப்பதில் லக்ஷ்மி ராய்க்கு மிகவும் பெருமையாம்.
இதிலும் வழக்கம் போலவே லக்ஷ்மி ராயின் கிளாமர் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்றும் படக்குழு பேசிக்கொள்கிறது. முதல் பாடலைக் கேட்டதும் அசந்துபோய் உள்ளார் அஜீத். ஏற்கெனவே யுவன் ஷங்கர் ராஜா இசையில் அஜீத்துக்கு நிறைய ஹிட் பாடல்கள் அமைந்துள்ளது. அந்த வகையில் இசையாலும் மங்காத்தா விளையாட இருக்கிறார் யுவன். எந்த சினிமா விதிகளும் இல்லாமல் தல ரசிகர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் படம் என்று வெங்கட் பிரபு சொல்லிவருகிறார்.
அதுமட்டும் இல்லாது படம் படு லோக்கலா இருக்கும் என்று அவர் சொல்கிறார். நீங்க என்ன யோசிக்கிறீங்க என்று புரிகிறது. லோக்கல் படத்துக்கு பாங்காங்கில் ஷூட்டிங்கா? அதுதான் எல்லாருக்கும் குழப்பம்! இதுபற்றி இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் என்ன விளையாடுறீங்க! என்று கேட்டால்... அதற்கு அவர் 'மங்காத்தா' என்று பஞ்ச் வைக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக