வெள்ளி, 26 நவம்பர், 2010

போலீசுக்கு பயந்து நடிகர் விஜயகுமார் குடும்பத்துடன் ஓட்டம்?

vijayakumar newsசென்னை:தமிழக டி.ஜி.பி.,யிடம், நடிகை வனிதா விஜயகுமார் அளித்துள்ள புகாரை அடுத்து, நடிகர் விஜயகுமார், மஞ்சுளா மற்றும் அருண் விஜய் ஆகியோரை கைது செய்ய, மேலிடத்து உத்தரவுக்காக போலீசார் இன்னமும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மூவரும் கைதுக்கு பயந்து, தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது.நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார். இவர், தனது இரண்டாவது கணவர் ஆனந்தராஜனுடன் நுங்கம்பாக்கம் கோத்தாரி நகரில் வசித்து வருகிறார். வனிதாவிற்கு முதல் கணவர் ஆகாஷ் மூலம் விஜய் ஸ்ரீஹரி (9) ஜோவிகா (5) என இரண்டு குழந்தைகளும், ஆனந்தராஜன் மூலம் ஜெயினிதா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த 5ம் தேதி, தீபாவளியை ஒட்டி, மூன்று குழந்தைகளும், மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி கோவில் தெருவில் உள்ள நடிகர் விஜயகுமார் வீட்டில் இருந்தனர்.தீபாவளி முடிந்து 7ம் தேதி தன் குழந்தைகளை அழைத்து வருவதற்காக கணவருடன் வனிதா விஜயகுமார் சென்றார். விஜயகுமார், மஞ்சுளா இருவரும், வனிதாவின் மகன் ஸ்ரீஹரியை அனுப்ப மறுத்து, அறையில் அடைத்துள்ளனர். இதனால், வனிதாவிற்கும், விஜயகுமாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
அப்போது விஜயகுமார் வீட்டிற்கு வந்த, அவரது மூத்த மனைவி முத்துக் கண்ணுவின் மகனும், நடிகருமான அருண் விஜய், வனிதாவை வயிற்றில் எட்டி உதைத்ததாக வனிதா புகார் கூறினார்.
அருண் விஜய் மீது மதுரவாயல் போலீசில் வனிதா விஜயகுமார், கணவர் ஆனந்தராஜனுடன் சென்று புகார் அளித்தார். புகாரின் மீது, போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், கடந்த 15ம் தேதி மருமகன் ஆனந்தராஜன் தன் கையை முறித்துவிட்டதாக மதுரவாயல் போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். பெயிலில் வெளிவர முடியாத மூன்று பிரிவுகளின் கீழ் அவசர அவசரமாக வழக்கு பதிந்த போலீசார், கடந்த 23ம் தேதி இரவு ஆனந்தராஜனை கைது செய்தனர்.
இதை எதிர்த்து, நேற்று முன்தினம் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு வந்த வனிதா விஜயகுமார், டி.ஜி.பி., லத்திகா சரணை சந்தித்து மனு அளித்தார். விஜயகுமாரை கைது செய்ய இப்போது வரை உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். ஆனால், நடிகர் விஜயகுமார், இரண்டாவது மனைவி மஞ்சுளா, முதல் மனைவியின் மகன் அருண் விஜய் ஆகியோர் கைதாவதை தவிர்க்க தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. அவர்கள், தங்களுக்கு தெரிந்த வி.ஐ.பி.,க்கள் மூலம் தூது முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.ஆனால், அருண் விஜயை கைது செய்யாத வரை, இப்பிரச்னையை விடப்போவதில்லை என்றும், இதற்கு பின்னணியில் யாரோ இருப்பதாகவும் வனிதா விஜயகுமார் தெரிவித்திருந்தார்.
குடும்பச் சண்டை வீதிக்கு வந்த நிலையில், என்ன செய்வதென்றே தெரியாமல் நடிகர் விஜயகுமார் தரப்பு தற்போது தவித்து வருகிறது.இவர்கள் குடும்பத்துக்கு, "எல்லாமாக இருக்கும், "சூப்பர் நடிகரின் இப்பிரச்னை குறித்த நடவடிக்கை பற்றி, சினிமாக்காரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக