வெள்ளி, 5 நவம்பர், 2010

காணி உறுதி இருந்தும் யாழ்ப்பாணத்தில் வீடு இல்லை: சிங்களவர்கள்



யாழ்ப்பாணத்தில் தமக்கு காணிகள் இருந்தும் அதற்கான உறுதிகள் இருந்தும் அரசாங்கம், தம்மை அந்தக்காணிகளில் குடியேற்ற தாமதித்து வருவதாக யாழ்;ப்பாணத்தில் வசித்ததாக கூறப்படும் சிங்களவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற இந்த மக்களின் பிரதிநிதிகள் சிலர் தம்மிடம் உள்ள காணிகளின் உறுதிகளை ஊடகங்களுக்கு காண்பித்தனர்.
தாம் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் வசித்த காணிகளை தமிழீழ விடுதலைப்புலிகள், தமது ஆதரவாளர்களுக்கும் மாவீரர் குடும்பங்களுக்கும் வழங்கியுள்ளதாக ஊடக சந்திப்பை நடத்தியவர்கள் தெரிவித்தனர்.
தாம் யாழ்ப்பாணத்தில் இருந்து 30 வருடங்களுக்கு முன்னர் விரட்டப்பட்ட பின்னர், மிஹிந்தலையில் தற்காலிகமாக இருந்ததாகவும் பின்னர் தற்போது யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக