ஞாயிறு, 28 நவம்பர், 2010

தலாய்லாமாவின் புத்த மடாலயம் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது.

புத்த மடாலயம் புதையும் அபாயம்

அருணாசலபிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற 330 ஆண்டு பழமைவாய்ந்த தலாய்லாமாவின் புத்த மடாலயம் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது.

அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டத்தில் உள்ள இம்மடாலயம் கிபி 1680ல் நிறுவப்பட்டது. ஆசியாவிலேயே 2வது பெரிய புத்த மடாலயம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள மடாலயம் தற்போது நிலச்சரிவில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
நேற்று முன்தினம் இப்பகுதியில் ஏற்பட்ட சிறிய நிலச்சரிவில் மின்கம்பங்கள் மண்ணில் புதைந்தன. தொடர்ந்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து அருணாச்சல பிரதேச முதல்வர் டோஜி காண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

நிவாரண உதவிகளை செய்யும் படியும், நிலச்சரிவு அபாயங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு தெரிவித்து உதவி கேட்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக