by Teavadai
வன்னி மக்களிடம் அடிவாங்கிய ஸ்ரீடெலோவின் வெளிநாட்டுப்பிரதிநிதி
தமிழ்மக்கள் மத்தியில் இருந்து கலைக்கப்படவேண்டிய இயக்கங்களில் ஸ்ரீடெலோவும் ஒன்று. சும்மா கிடந்த இயக்கத்திற்கு உயிர் கொடுத்ததில் டக்ளசுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. இருக்கிற இயக்கத் தலைவலிகள் காணாது என்று இதுவும் தமிழ்மக்களுக்கு துன்பம் தருவகே இயங்கியது. கொள்கை கோலம் கோத்திரம் என்று எந்த மண்ணாங்கட்டியும் டெலோ ஸ்ரீடெலோ விற்கு கிடையாது. டெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்டபோது அனுதாபம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால் செல்வம் அடைக்கலநாதன் டெலோவிற்கு தலைவராக வந்ததோடு அந்த அனுதாபமும் காத்தோடு பறந்து போய்விட்டது. இயக்கம் வளந்திச்சோ இல்லையோ செல்வம் அடைக்கலநாதன் வண்டியும் தொந்தியுமாக வளர்ந்ததுதான் மிச்சம்.
இந்த லட்சணத்தில் ஸ்ரீடெலோ என இன்னொண்டு புறப்பட்டு வந்தது. கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா என தமிழ்மக்கள் வடிவேலு பாணியில் சலிச்சுக் கொள்ள நடந்த தேர்தல்களில் ஸ்ரீடெலோவை தமிழ்மக்கள் ஏனென்றும் எட்டியும் பார்க்கவில்லை. வெளிநாடுகளில் இருந்த பழைய டெலோகாரர் ஸ்ரீடெலோவிற்கு இருந்த அரசு ஆதரவு காரணமாக வன்னியில் போய் தமது சுத்துமாத்து நடவடிக்கைகளில் இறங்கியதாக சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதில் ஜெர்மனியில் இருந்து போன நிமோ என்பவர் அதிகமாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்
இவர் வன்னியில் கக்குசு கட்டித்தருவதாக காசு வாங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும் காணிகளில் மோசடி செய்ததாகவும் இறுதியில் அங்குள்ள மக்களால் அடிவாங்கி திரும்பவும் ஜெர்மனிக்கு வந்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இவருடன் இன்னொருவரும் அடிவாங்கி வந்துள்ளார். இவர் இஞ்சினியர் என்று சுத்துமாத்து செய்ததாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடப்பாவிங்களா மரமேறி விழுந்தவன் மேல் மாடேறின மாதிரி ஏற்கனவே துன்பப்பட்டு நொந்துபோய் உள்ள வன்னி மக்கள் மீதா உங்களது சுத்துமாத்துக்களை காட்டவேண்டும். பாவப்பட்ட ஜன்மங்கள.;; புலிகள் அந்தமக்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு போய் செய்த கொடுமைகள் காணாது எண்டால் நீங்களுமா……
திருந்தவே மாட்டீங்களா………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக