வியாழன், 25 நவம்பர், 2010

அரங்கம் நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம்  தெரிவித்தார். தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்றிரவு 7 மணியில் இருந்து 10.30 வரை நடைபெற்றது. இதன்போது, இனப்பிரச்சினை, தமிழ் மக்களின் பிரச்சினைக்கான உடனடி தீர்வு குறித்து நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி மகஜர் ஒன்று கையளிக்க உள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதியின் சந்திப்பின் போது வடக்கு, கிழக்கில் அகதிமுகாமில் உள்ள மக்களின் அர்த்தமுள்ள மீள்குடியேற்றம், இராணுவ ஆட்சியில் இருந்து விடுப்பட்டு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக