ஞாயிறு, 21 நவம்பர், 2010

உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள்

வாழும் நாடு வேறென்றாலும், தமிழர்கள் நாடி கூடும் இடமாக இன்று இணைய பெருவெளி திகழ்கிறது. இணைய ‘வலை’ விரிகுடாவில் கூடும் வலைமீன்களாய், இணையத் தோட்டத்தில் பூக்கும் வலைப்பூக்களாய் தமிழன் என்ற ஒரே சிந்தனையில் ஒன்றிணைந்துள்ளனர் எங்கெங்கோ வாழும் தமிழர்கள்.


அமெரிக்கா, ஐரோப்பியா, ஆஸ்திரோலியா, அரேபிய வளைகுடா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள்... தமிழ்ச் சங்கள், தமிழ் இணையங்கள் மூலமாக தமிழ்ப் பணியும், தமிழர்களை இணைக்கும் பணியையும் நிகழ்த்திவருகிறார்கள். இது போன்ற தமிழ்ச் சங்களின் மூலம் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறார்கள். இங்கு சிறப்பிக்கப்படுவர்கள் பெரும்பாலும் பிரபலமானவர்களாகவே இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், எந்த ஒரு அறிமுகமோ, பிரபலமோ இல்லாத... எழுத்தார்வம் மட்டுமே கொண்ட தமிழ் எழுத்தாளர்களை கவுரவிக்கும் விதமாக சிங்கப்பூர் வாழ் தமிழ் வலைப்பதிவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

எழுத்தார்வம் மிக்க தமிழ் ஆர்வலர்களின் எழுதும் திறனுக்கு சவாலாகவும், தமிழ் இணைய ஆர்வலர்களை இணைக்கும் களமாகவும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், தமிழ்வெளி.காம்(www.tamilveli.com) இணையதளத்துடன் இணைந்து ‘மணற்கேணி’ என்ற தலைப்பில் கருத்தாய்வு போட்டியினை கடந்த ஆண்டுமுதல் நடத்திவருகின்றனர்.

தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கூடும் ஒரு நிகழ்வாக நடத்தப்பெறும் இக்கருத்தாய்வு கட்டுரைப் போட்டியில் வெற்றிப்பெறும் 3 வெற்றியாளர்கள் ஒரு வார சிங்கப்பூர் சுற்றுலாவை பரிசாக வெல்ல ஒரு வாய்ப்பை பெறுகிறார்கள்.

கடந்த 2009 ஆம் ஆண்டு, முதன்முதலாக நடைபெற்ற மணற்கேணி கருத்தாய்வுப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட 50 கட்டுரைகளில், தலைப்பு வாரியாக 3 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன.

அரசியல் /சமூகம் பிரிவில் தருமி என்பவரின் ‘சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்’ என்னும் கட்டுரை முதலிடம் பிடித்தது.

தமிழ் அறிவியில் பிரிவில் தேவன்மாயம் என்பவரின் ‘ஏமக்குறைநோய் (A I D S)’ என்னும் கட்டுரை,
தமிழ் இலக்கிய பிரிவில் பிரபாகர் என்பவரின் ‘தமிழர் இசை’ தொடர்பான கட்டுரை ஆகியவையும் வெற்றிப்பெற்றன.

( தேவன்மாயம், தருமி மற்றும் பிரபாகர்)

இதேபோல், இந்த ஆண்டுக்கான, மணற்கேணி 2010 கருத்தாய்வுப் போட்டியில், மூன்று தலைப்பில் கட்டுரைப்போட்டிகள் நடைபெறவிருக்கிறது. பிரிவுக்கு ஒரு வெற்றியாளர் என தலா 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வாரம் சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்படவிருக்கிறார்கள். இப்போட்டிக்கு கட்டுரைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31, 2010.
2010 மணற்கேணி கருத்தாய்வு போட்டி விபரம் :

அரசியல் / குமுகாயம் (சமூகம்)
1. களப்பிரர் காலம்
2. இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள்
3. எல்லா சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன்?
4. இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை
5. தமிழகத்தில் நகரமயமாக்கலும் விளைவுகளும்
6. கருத்துரிமை சுதந்திரம், ஊடகங்களின் வணிக நோக்கம், மாற்று ஊடகங்கள்
7. ஈழத்தமிழர் நிலை நேற்று இன்று நாளை
8. சமச்சீர் கல்வி
9. கூட்டாண்மை(Corporate) அரசியல் - நவீன சுரண்டல்
10.புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தில் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமங்கள் - நேற்று இன்று நாளை

தமிழ் / இலக்கியம்

1.பழந்தமிழ் இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்
2.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு
3.நாட்டுப்புற இலக்கியங்கள்
4.சேரர்கள்
5.உரையாசிரியர்கள்
6.தமிழ் விக்கிப்பீடியா
7.மெல்லத்தமிழினி வாழும்
8.எழுத்துச் சீர்திருத்தம்

அறிவியல் தமிழ் / தமிழில் தொழில் நுட்பம்

1.மரபுசாரா ஆற்றல் வளம்
2,தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை
3.தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை
4.அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்
5. கணிணித்தமிழ்


தமிழை முன்னிறுத்தி நடைபெறும் போட்டி என்பதால் ஆக்கங்களில் இயன்றவரை தனித்தமிழ் முயற்சிக்கு வரவேற்பளிக்கபடுகிறது. கட்டுரைகளை அனுப்புவோர் மின்னஞ்சலாக அனுப்பி வைக்கவும்,

அரசியல் /சமூகம் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி- politics@sgtamilbloggers.com

தமிழ் இலக்கியம் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி- literature@sgtamilbloggers.com

தமிழ் அறிவியல் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி- science@sgtamilbloggers.com

(போட்டி தொடங்கும் நாளுக்கு முன்னர் அல்லது போட்டிக்கான ஆக்கங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாளுக்கு பின்னர் வரும் ஆக்கங்கள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.)

மேலும் விபரங்களுக்கு : www.sgtamilbloggers.com மற்றும் www.tamilveli.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக