யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் அடைமழைக் காரணமாக தாழ்வான நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு இடம் பெயரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.வடக்கு பகுதிகளில் கடந்த காலத்தில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக வெள்ள வாய்க்கால்கள் துப்பரவு செய்யப்படாமல் அழிந்து நிலையில் உள்ளதால் வெள்ளம் கடலுக்கு வழிந்தோட முடியாத நிலமை காணப்படுகின்றது.
இந்நிலையில் உள்ளுராட்சி அமைப்புகள் இந்த வெள்ள வாய்க்கால்கள் விடயத்தில் போதிய கவனம் கடந்த காலங்களில் எடுக்காதமையால் இத்தகைய அவல நிலமை ஏற்படக்காரணமாக உள்ளது என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து பெய்துவரும் அடைமழைக் காரணமாக பல நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இடம் பெயரவேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக