புதன், 10 நவம்பர், 2010

தயாநிதி அழகிரியின் கல்யாண வைபோகம் பெரிய குடும்பத்தை கைகோக்க வைத்துள்ளது.



ஆண்டாண்டு காலமா இருக்கிற மனஸ்தாபம் எல்லாம் ஒரு கல்யாணத்துல முடிஞ்சிடும்’ என்பது பட்டி முதல் பட்டணம் வரை உள்ள நம்பிக்கை. இந்த நம்பிக்கை இப்போது கருணாநிதியின் குடும்பத்திலும் பாலத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நடக்கும் மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரியின் கல்யாண வைபோகம் பெரிய குடும்பத்தை கைகோக்க வைத்துள்ளது.

இது குறித்து தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

“அழகிரிக்கும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் உரசல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாகர்கோவிலில் நடந்த முப்பெரும் விழா உள்ளிட்ட தி.மு.க. நிகழ்ச்சிகள் சிலவற்றை அழகிரி புறக்கணித்ததை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

கடந்த 30-ம் தேதி பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக 29-ம் தேதி இரவு ஸ்டாலின் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தார். மது ரை விமான நிலையத்தில் அவரை வரவேற்கச் செல்வதா - வேண்டாமா? என்ற குழப்பம் மதுரை தி.மு.க.வினர் பலரிடம் இருந்தது. அப்போது அழகிரி சென்னையில் இருந்தார்.

திடீரென மதுரை தி.மு.க.வினருக்கு, “கட்சி நிர்வாகிகள் எல்லாம் துணை முதல்வரை வரவேற்கச் செல்லுங்கள்’’ என்ற உத்தரவு அழகிரியிடம் இருந்து வர, அனைவரும் அடித்துப் பிடித்து விமான நிலையம் சென்று ஸ்டாலினை வரவேற்றனர். மறுநாள் மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் ஏராள மானோரின் கார்கள் பின்தொடர பசும்பொன் சென்று வந்தார் ஸ்டாலின்.

மீண்டும் கடந்த வியாழக்கிழமை துணைமுதல்வர் ஸ்டாலின் விமானத்தில் மதுரை வந்தார். அவருடன் அவர் சகோதரி செல்வியும் வந்தார். அப்போது தமுக்கம் மைதானத்தில் திருமண ஏற்பாடு தொடர்பான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் அழகிரி. ஸ்டாலினும், செல்வியும் அங்கு சென்றனர்.

அழகிரியுடன் இணைந்து திருமண ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர். பந்தல் அமைக்கும் சென்னை சேகர் என்பவரைக் கூப்பிட்டு சில மாற்றங்களைச் சொன்னார் ஸ்டாலின். வரும் வி.ஐ.பி.களுக்காக ஒதுக்கப்படும் இடம் குறித்துக் கேட்டறிந்தார். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு எந்த மாதிரியான நாற்காலிகள் போடவேண்டும் என்பதையும் விளக்கினார்.

சுமார் பன்னிரண்டு மணிக்கு ஸ்டாலின், செல்வி இருவரும் அழகிரி வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு மதிய உணவு சாப்பிட்டனர். பகல் ஒன்றரைக்கு அங்கிருந்து கிளம்பினர். அன்றைக்கு ஸ்டாலினும், செல்வியும் திருமண ஏற்பாட்டில் காண்பித்த அக்கறை கருணாநிதி குடும்பம் ஒற்றுமையோடு இருக்கிறது என்பதற்கு சாட்சியாக இருந்தது. இது தாற்காலிகமானதா? இல்லை நிரந்தரமானதா? என்ற கேள்வியும் கட்சியினரிடம் எழுந்துள்ளது. இது நிரந்தரமாக வேண்டும் என்பதே எங்கள் ஆசை’’ என மூச்சுவிடாமல் சொல்லிமுடித்தார் அந்த தி.மு.க. நிர்வாகி.

‘திருமண வாழ்த்து தொடர்பான ‘ஃபிளக்ஸ்’ விளம்பரங்கள் வைப்பவர்கள் தங்கள் பெயர்களை அதில் குறிப்பிடவேண்டாம். மதுரை நகர், மதுரை புறநகர் என குறிப்பிட் டால் போதும்’ என அழகிரி தரப்பிலிருந்து ‘இன்ஸ்ட்ரக்ஷன்’ கொடுத்திருக்கிறார்களாம்.

அதுவும் வாகனங்கள் திரும்பும் இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஃபிளக்ஸ்கள் வைக்கக்கூடாது என்றும் அழகிரி கூறியிருக்கிறாராம். இதையடு த்து, மதுரை நகரின் ஆட்டோக்களின் பின்புறம் திருமண வாழ்த்து பளிச்சிடுகின்றன.

கட்சியினரின் எந்த நடவடிக்கையும் ‘வளர்ப்புமகன்’ திருமணத்தை நினைவுபடுத்துவதாக இருந்து விடக்கூடாது என்பதில் கருணாநிதி குடும்பமே ஜாக்கிரதையாக இ ருக்கிறதாம். அதனால் கட்சியினர் சிலரைக் கூப்பிட்டு அடக்கி வாசிக்கவும் உத்தரவு போட்டிருக்கிறாராம்.



திருமணத்தன்று மத்திய, மாநில வி.ஐ.பி.கள் குவிவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் தமுக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து காவல்துறை இப்போதே தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறது.

திருமணத்துக்கு கார் பாஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்துக்கு வரும் கார்களை மைதானத்தின் கடைசிப் பகுதியிலும் காந்தி மியூசியத்திலும் நிறுத்தலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

திருமணத்துக்கான கேட்டரிங் சென்னை ரமேஷ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். எத்தனை பேர் வந்தாலும் தட்டுப்பாடில்லாமல் உணவு வழங்கவேண்டும் என் பது அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள ‘இன்ஸ்ட்ரக்ஷன்’. இருபத்தைந்தாயிரத்துக்கு மேற்பட்டோர் மதிய விருந்து சாப்பிடுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள்.

திருமணத்தைக் காரணமாக வைத்து கட்சியினரை அழகிரி அடிக்கடி சந்திப்பதும், கூப்பிட்டுப் பேசுவதும், சிலருக்கு வேஷ்டி, சட்டை வாங்கி பரிசளிப்பதும் கட்சியினர் மத் தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் கருணாநிதி மதுரை வருவதையொட்டி சில அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவிடலாம் என்றும் அதிகாரிகள் நினைக்கிறார்கள். உசிலம்பட்டி அருகே சமத் துவபுரம், கான்கிரீட் வீடு வழங்கும் விழா, மதுரை செல்லூர் மேம்பாலம் ஆகிய பணிகளை முடித்து திறப்புவிழா நடத்திவிடலாம் என அதிகாரிகள் தரப்பு சென்னைக்கு தகவல் சொல்லியிருக்கிறது.

அ.தி.மு.க.வின் அக்டோபர் 18 கூட்டத்தை விட, நவம்பர் 18-ம் தேதி நடைபெறும் கல்யாணத்துக்கு இருமடங்கு கூட்டத்தைக் கூட்டி அசத்தப் போகிறார்களாம் உடன் பிறப்புகள். வாழ்த்துகள் மட்டும் தான். வசைமொழி வேண்டாம் என்று மேடை ஏறுபவர்களுக்கு அறிவுறுத்த இருக்கிறார்களாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக