சனி, 13 நவம்பர், 2010

சிங்கள மக்களை இரவோடு இரவாக குடியமர்த்த முடியுமானால் வலிகாமம் வடக்கு மக்களை ஏன் இதுவரை குடியேற்றவில்லை? '

 யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை இரவோடு இரவாக குடியேற்ற முடியுமானால் வலி வடக்கு பகுதி மக்களை ஏன் இதுவரை மீள்குடியேற்றவில்லை? வலி. வடக்கு மக்களுக்கு இந்த ஆனைக்குழு ஏதாவது நல்லது செய்யுமா? என்று நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பொதுமகனான சா.தங்கராசா கேள்வி எழுப்பினார். எம்மை அங்கு மீள் குடியேற்றுமாறு கோரி நாம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தோம். அதேகாலப் பகுதியில் தான் வடக்கு, கிழக்கைப் பிரிக்க வேண்டுமெனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வலி. வடக்கில் மக்களை குடியமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வடக்கு கிழக்கையும் பிரிக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் வடக்கு கிழக்கு பிரிப்புதொடர்பான தீர்ப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் வலிகாமம் வடக்கில் மக்களை மீள்குடியேற்றுமாறு விடுக்கப்பட்ட உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக