திங்கள், 15 நவம்பர், 2010

இலங்கையில் மொழிப்பிரச்சினைக்கு தீர்வுகாண உதவி வழங்கப்படும்-இந்தியா..!

இலங்கையில் மொழிப்பிரச்சினைக்கு தீர்வுகாண உதவிகள் வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்குமிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்திய நிபுணர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. இந்திய மனிதவள அபிவிருத்தி அமைச்சின் மொழிப்பிரிவு தலைவர் அனிதா பட்நாகர் உள்ளிட்ட நான்கு மொழியியலாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இலங்கை மொழிகளுக்கு இடையில் புரிந்துணர்வுடன் கூடிய அபிவிருத்தியை எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக அனிதா தெரிவித்துள்ளார். மொழிப்பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும் அரசியல் மற்றும் பொருளாhர முரண்பாடுகளே ஏற்பட்டிருக்கும் என இந்திய நிபுணர்கள் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் ராஜேஷ் சச்தேவா குறிப்பிட்டுள்ளார். தமிழ் சிங்களமொழி ஆசிரியர்களுக்கு நிலவும் இடைவெளி நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்மொழி ஆசிரியர்களுக்கு சிங்கள அறிவும், சிங்கள மொழி ஆசிரியர்களுக்கு தமிழறிவும் காணப்பட வேண்டியது அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஒன்பது மொழிப்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், அதற்கான உதவிகளை இந்தியா வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பான்மையான தமிழ் மக்கள் சிங்கள மொழியையும், பெரும்பான்யைமான சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றுக்கொள்ள விரும்புவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக