ஞாயிறு, 28 நவம்பர், 2010

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழில் உரையாற்றினார்

யாழ்ப்பாணம், அரியாலை நாவலடியில் நேற்று இடம்பெற்ற வீட்டுத் திட்ட அடிக்கல் நடும் நிகழ்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தமிழில் உரையாற்றினார் யாழ்ப்பாணத்தல் அமைக்கப்படவுள்ள இந்திய அரசாங்கத்தின உதவியுடனான வீட்டுத்திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இலங்கை மக்கள் சந்தோஷமாகவும் சுகமாகவும் வாழ எமது நாட்டு உதவிகள் கிடைக்கும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதிகள், கல்வி வசதி கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு சற்றுச் சிரமத்துடன் தமிழில் உரையாற்றினார் கிருஷ்ணா.
சில நிமிடம் வரையில் அவர் இந்தப் பேச்சை பேசி முடிந்தார். தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா, வன்னிப்போரின் போது இந்திய மருத்துவக்குழு, காயமடைந்த 50 ஆயிரம் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதில் 3000 பேர் வரை கடும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக