சனி, 13 நவம்பர், 2010

பிள்ளையான் தாக்கினார்'- குற்றச்சாட்டு

- பி.பி.சி
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும், அவரது ஆதரவாளர்களும் தம்மை தாக்கியதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான பிரபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.இந்தச் சம்பவத்தில் தானும், மற்றுமொரு மாநகரசபை உறுப்பினரான கந்தையா அருமைலிங்கமும் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீதா பிரபாகரனின் உத்தியோகபூர்வ வீட்டில் நடைபெற்ற மாநகரசபை உறுப்பினர்களின் கூட்டம் ஒன்றில் அழைப்பின்றி நுழைந்த முதலமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் சைக்கிள் செயின் மற்றும் தடிகளால் தம்மை தாக்கியதாகவும் அவர் கூறினார். மாநகரசபையால் கட்டப்பட்ட புதிய கடைகளின் ஒதுக்கீடு குறித்த ஒரு விவகாரம் காரணமாகவே தாம் தாக்கப்பட்டதாகவும் பிரபாகரன் கூறினார். இவை குறித்த முதலமைச்சர் சந்திரகாந்தனின் கருத்தை எம்மால் உடனடியாக பெறமுடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக