மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் பிரவேசித்து சட்டவிரோதமாக குடியேற முற்பட்ட 3 இலங்கை தமிழர்களையும் நாடு கடத்துமாறு அமரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
கடந்த செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட அவர்கள் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர். மெக்சிகோவின் சியோ கிரேண்ட் நதியின் ஊடாக அவர்கள் அமெரிக்கா செல்ல முற்பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணைகளின் போது, தமக்கு மெக்சிகோவின் சில சுற்றுலா வழிகாட்டிகள் உதவி செய்ததாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் அவர்களை 4 முதல் 6 வாரங்களுக்கு சிறையில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், பின்னர் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளது. கைதானவர்கள் ரூபன் சிவகிரிநாதன், ரிச்சர்ட் பத்தினாதர் மற்றும் ரமேஸ் மகேஸ்வரன் ஆகியோர் என THE BROWNHILL HERALD செய்தி வெளியிட்டுள்ளது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக